திங்கள், 12 செப்டம்பர், 2022

"மனதை புண்படுத்தும் பக்கங்கள்" எந்த நேரத்திலும் கொள்கையை மீறி எழுதியது கிடையாது! ஷாலின் மரியா லாரன்ஸ்

May be an image of 1 person and text that says '3-8-2022 குமுதம் தமிழர்களின் இதயத் துடிப்பு நம்பர் தமிழ் நம்பர்தமிழ்வாரஇதழ் வார இதழ் தன்ப புண்படுத்தும் மனதைம் தைப் Uம நான் ஒரு சண்டைக்காரி! ஷாலின் மரிய லாரன்ஸ் இப்போது விற்பனையில்'

Shalin Maria Lawrence :  கடந்த வாரத்துடன் என்னுடைய "மனதை புண்படுத்தும் பக்கங்கள்" தொடர் குமுதத்தில் வெற்றிகரமாக முடிவடைகிறது .
"இது தற்காலிகமாக முடிகிறது என்று சொல்லுங்கள் ,இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது" என்று குமுதம் ஆசிரியர் சஞ்சீவி அவர்கள் சொன்னார் .ஆகவே தற்காலிக முடிவு தான் .வரும் காலத்தில் குமுதத்தில் பல் வேறு தலைப்புகளில் எழுதுவேன் . திரு சஞ்சீவி அவர்கள் கடந்த இரு மாதங்களாக எனக்கு நல்ல ஆதரவை கொடுத்தார் .அவருக்கு நெஞ்சின் ஆழத்தில் இருந்து நன்றி.
2017 இல் எனக்கு முதன் முதலில் பதிப்பு வாய்ப்பு கொடுத்தது குமுதம் . அதன் பிறகு எனது முதல் தொடரும் குமுதத்தில் தான் வந்து இருக்கிறது . மறைந்த ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நான் அதிகம் கடமை பட்டுள்ளேன் . எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில் மிக பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது .   மேலும் 72 வாரங்கள் எந்த வித தடையுமில்லாமல் என்னுடைய தொடரை எழுதி இருக்கிறேன் . முதலில் மிக பயமாக இருந்தது .பின்பு பாபாசாஹெப் அம்பேத்கர் காட்டிய ஒலியில் பயணித்தேன் . கிட்ட தட்ட ஒன்றரை வருடங்கள் என்பது எனக்கே மலைப்பாக இருக்கிறது .

தமிழில் முதல் intersectional feminism குறித்த தொடர் இது என்று நினைக்கிறேன் . இங்கே சமூக வலைதளங்களில் பெரிதாக பேச படவில்லை என்றாலும் வெளியில் பொது சமூகத்தில் அது கண்ட பிரமாண்ட வெற்றியை அறிந்திருக்கிறேன் . அதனால்தான் இத்தனை வாரம் ஓடியது என்பதும் புரிந்த கொள்ள முடிகிறது .
என் போன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் தீவிர தலித் அரசியல் பேசும் பெண்களுக்கு வாய்ப்பு என்பது குதிரைக்கொம்பு ,ஆகவே இந்த வாய்ப்பை எவ்வளவோ எதிர்ப்புகள் மத்தியில் போராடி காப்பாற்றினேன் .
ஆனால் எந்த நேரத்திலும் நான் கொண்ட கொள்கையை மீறி ஒரு வார்த்தை கூட எழுதியது கிடையாது .என்னுடைய அரசியல் என் எழுத்தில் அப்பட்டமாக தெரியும் .கடைசி கட்டுரை ஒரு பானை சோருக்கு பதம் .
இந்த பயணத்தில் நான் கற்று கொண்டது எராளம். குறிப்பாக பெண்ணியத்தில் புதிய விஷயங்கள் ,ஆழ்ந்த சிந்தனைகள் போக போக கண் முன்னே விரிந்து கொண்டே போனது .
இந்த தொடர் தொடர்பாக எனக்கு கிடைத்த அன்பு நட்புகள் அதிகம் . அவர்களுக்கு என் நன்றியும் முத்தங்களும் . குறிப்பாக என் வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன் .
மேலும் குமுதம் எடிட்டோரியல் குழுவிற்கு நான் அதிகம் கடமைப்பட்டுள்ளேன் . என்னுடைய இலக்கிய பிழைகளையும் ,எழுத்து பிழைகளையும் 72 வாரங்கள் பொறுத்து கொண்டதற்கே அவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் .
குமுதம் குழுமம் ,குறிப்பாக MD வரதராஜன் அவர்களுக்கு என் அன்பின் நன்றிகள் .
ஒன்று முடிய ஒன்று துவங்க வேண்டும்.அடுத்து என்ன என்பதை காலம் முடிவு செய்யும் என்று நம்பி I'm surrendering to the unknown as usual .

கருத்துகள் இல்லை: