செவ்வாய், 13 செப்டம்பர், 2022

சிக்கிய எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸ்- வெளிநாட்டு உல்லாச பயணம் குறித்து துருவி துருவி விசாரணை!

DVAC officials question SP Velumanis son Vikas Velumani

tamil.oneindia.com  -  Mathivanan Maran   : கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விகாஸிடம் வெளிநாட்டு உல்லாச பயணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ரூ500 கோடி ஊழல் முறைகேடு செய்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்பது புகார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் முறைகேடு மூலம் ஒரு எல்இடி பல்புக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ3,500 கொடுத்து இழப்பை சந்தித்ததும் தெரியவந்தது.


இந்த விசாரணை அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது பினாமிகள் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துரை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வேலுமணிக்கு சொந்தமான மொத்தம் 26 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
நான் எங்க வேண்டுமானாலும் போவேன்... உங்களுக்கு என்ன? போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம்

இச்சோதனைகளின் போது எஸ்.பி.வேலுமணியி விகாஸை, வீட்டு கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து சென்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது விகாஸின் வெளிநாட்டு உல்லாச பயணங்கள், சொகுசு கார்கள் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
உலகமே கொரோனா பெருந்தொற்றால் அச்சத்தில் உறைந்து போய் கிடந்த காலத்தில்தான் வேலுமணி மகன் விகாஸ், ஆஸ்திரேலியாவில் உல்லாச பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அப்போது கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாமல் இருந்தது. ஆகையால் கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இல்லை. மேலும் ஆஸ்திரேலியாவில் வேலுமணி மகன் விகாஸ், சுற்று பயணம் செய்வதற்கு குட்டி விமானத்தையும் பயன்படுத்தினார். இது தொடர்பான படங்களை சமூக வலைதளங்களிலும் நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தார் விகாஸ்.

அப்போதே விகாஸின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. ஊழல் முறைகேடு பணத்தை முதலீடு செய்யத்தான் விகாஸ் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.
DVAC officials question SP Velumanis son Vikas Velumani

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். விகாஸ் வெளிநாட்டில் உல்லாசமாக இருந்த போது, யாருடைய பணத்தை செலவு செய்தார்? வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்கள் யாருடையது? இந்த சொகுசு கார்களை யார் யார் பயன்படுத்துகிறார்கள்? என்பது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். மேலும் வேலுமணி நண்பர் உள்ளிட்ட சிலரது இடங்கள், நிறுவனங்களில் இருந்து கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடு9த்துச் சென்றுள்ளனர்

கருத்துகள் இல்லை: