திங்கள், 12 செப்டம்பர், 2022

ரணிலின் மிகப்பெரிய தகுதியே ரணிலை பலருக்கும் பிடிக்காது என்பதுதான்! சமூகவலை தளங்களில் ரணில் ....

May be an image of 3 people, people standing and suit

Annesley Ratnasingham  : .ரணில் ஒரு  மிக பெரிய புத்திசாலி.......
ரணில் கொஞ்சம் கொஞ்சமாக ராஜபக்ச குழுவை எதிர்க்க தொடங்குவார் .
இப்போது ஒரு MP கூட இல்லாதவர் Basil உடன் சேர்ந்து செல்வதை தவிர வேறு வழி இல்லை ....
புதிய நியமனங்களை வைத்து புரிந்து கொள்ளலாம் ...
ஆனால் சிறிது சிறிதாக ராஜபக்ஸாக்களுக்கு எதிராக அநேக MP களை திருப்புவார்...
.அதில் புதியதாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட MP களை 5 வருடத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்கப்போவதாக மிரட்டுவார் ...( Pension இல்லாமல் போகும் என்பதால் )...
இவைகளின்  ஒரு ஆரம்பம்தான் ....President says he will give Parliament 6 months to agree on electoral reforms ...
ரணில் மேற்கத்தைய துணையுடன்  தேர்தலில் வென்று மிக பெரிய சக்தியாக மீண்டும் ஜனாதிபதியாவார் ...
Thiyagarasa Ramesh  : ரணில் புத்திசாலிஎன்பதை நீங்கள் எப்போது புரிந்துகொண்டீர்கள்


Annesley Ratnasingham  : Thiyagarasa Ramesh ...1972 இல் இருந்து .
Thayalan Thaya  : பாராளுன்ற தேர்தலை பிற்போடுவதன் ஊடாக வெற்றியடைவார்.தேர்தலில் தோல்வியடைவார். ரணில் வெற்றியடைவதென்றால் 57 பில்லியன் டொலர் யாரும் நன்கொடை வழங்கவேண்டும்.
இரண்டு மாதத்திலே சனாதிபதியின் முகநூலில் அதிகளவு சிரிப்புக்களை மக்கள் பின்னூட்டமாக தெரிவு செய்கின்றனர்.

Vithuran Sivalingam : அரசியல் என்றால் அதுதானே அரசியல்வாதி என்றாலும் அதுதான் ரனில் ஒரு அரசியல் ராஜதந்திரி இலங்கையில் அவர் பெயர் இல்லாமல் அரசியல் வரலாறு இல்லை என்பதை கடைசியாக தேசியல் பட்டியலூடாக வந்து பிரதமராகி ஜனாதிபதியானார்அவர்கட்சி சார்பான உறுப்பினர்கள் இன்றி இதைவிட இராஜதந்திரம் இருக்கமுடியுமா?

 Annesley Ratnasingham  :  Vithuran Sivalingam ...அவருக்கு மேற்கத்தைய நாடுகளின் முழு ஆதரவும் எப்போதும் உண்டு . ...தற்போது இலங்கையின் அணைத்து அதிகாரத்தையும் வைத்திருப்பவர்கள் மேற்கத்தைய நாடுகள் தான் .

ராதா மனோகர் : இன்றய தேதியில் இலங்கை மக்களுக்கு  ரணிலை விட்டால் யாருமில்லை.. இன்னும் சரியாக சொல்லப்போனால் இலங்கை மக்களுக்கு கிடைத்த ஒரே அதிஷ்டமே ரணில்தான்
ரணிலின் மிகப்பெரிய தகுதியே ரணிலை பலருக்கும் பிடிக்காது என்பதுதான்   
இலங்கையின் பலர் என்பது ஓவராக பொதுவெளியில் கூச்சலிடும் அரைவேக்காடுகள்தான்
இந்த அரைவேக்காடுகளின்  ஆதரவு பெற்ற சக்திகள் சுமார் எழுபது ஆண்டுகளாக என்ன விதமான அரசியலை முன்னெடுத்திருந்தார்கள் என்பதை நாடு பார்த்து கொண்டுதான் இருக்கிறது
இந்த அரைவேக்காடுகள் பலரும் காலத்திற்கு காலம் புலிகளைக்கூட ஆதரித்திருந்தார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது
இதே அரைவேக்காடுகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்த்து புலிகளை குளிர்வித்தவர்கள் என்பதுவும் ஞாபகத்தில் இருத்தவேண்டிய விடயம்
இன்று இதே அரைவேக்காடுகள் அதே ஒப்பந்தம் மூலம் கிடைத்த மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி கோரஸ் பாடுவதையும் நாடு பார்த்து கொண்டுதான் இருக்கிறது
இலங்கை மக்களின் பேரதிஷ்டம்தான் இன்று ரணில் ஜனாதிபதியாக இருப்பது
மக்களின் தவறுகளை கூட சிலவேளைகளில் இயற்கை நிவர்த்தி செய்து விடும்
இலங்கை வங்குரோத்து நிலைமையில் இருந்து மீண்டதற்கு ரணில் மிகப்பெரிய காரணம் என்பதை விட ரணில் மட்டும்தான்  காரணம் என்பதே பொருத்தமானது 

கருத்துகள் இல்லை: