செவ்வாய், 13 செப்டம்பர், 2022

முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக ஆலோசனை கூட்டம் துறைசார் செயலர்களுக்கு அழைப்பு

tamil.oneindia.com - Shyamsundar  :  சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை துறை ரீதியாக அனைத்து செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பான அறிக்கையும் இந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. விரைவில் இந்த அறிக்கைகள் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
”ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்” மெய்யநாதனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ”ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்” மெய்யநாதனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.. அதிர்ந்த ஸ்டேடியம்!

கூட்டம்
தமிழ்நாடு அமைச்சர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நடந்து இரண்டு வாரத்திலேயே தற்போது முதல்வர் ஸ்டாலின் அடுத்த கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் நாளை துறை ரீதியாக அனைத்து செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாளை காலை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலாளர்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கைக்கு பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரிப்போர்ட்
பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றுமின்றி செயலாளர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள், துறை ரீதியாக என்னென்னெ பணிகளை செய்துள்ளனர் பற்றிய ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்றுள்ளதாம். இதை பற்றி நாளை ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சில அதிகாரிகளுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆலோசனை
நாளை நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளார். 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது. துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன? அவற்றில் எவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை? எவை நிறைவேற்றப்பட்டு வருகிறது? எவை இன்னும் தொடங்கவே படவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விசாரிக்க உள்ளார்.

பட்ஜெட்
இந்த மீட்டிங்கில் துறை ரீதியாக ஏற்பட்டுள்ள சுணக்கங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்க உள்ளார். சுணக்கங்கள் ஏற்பட என்ன காரணம், துறை ரீதியாக நிதி நிலை எப்படி இருக்கிறது. பொருளாதார ரீதியாக எந்த துறை பின் தங்கி உள்ளது. எந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டி இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்க உள்ளார். அதேபோல் மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவாக உள்ள துறைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்க உள்ளார்.

திட்டங்கள் என்னென்ன?
இந்த துறைகள் எப்படி இயங்குகின்றன என்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். வரி மூலம் வரும் வருவாயை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டின் வருவாய் வரி வழியாக அதிகரித்தது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வரி வருவாய் 41,688 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதேபோல் வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளது. அதோடு மழைக்காலம் தொடங்கும் முன் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை: