திங்கள், 12 செப்டம்பர், 2022

ராகுல் காந்தி கேரளா எல்லையில்... நடை பயணத்தைத் தொடர்ந்தார்

நக்கீரன்  : கேரளாவில் நடை பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி எம்.பி.!
தமிழகத்தில் நடைப் பயணத்தை நிறைவுச் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தற்போது கேரளாவில் நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தில் 53 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி எம்.பி. கடந்துள்ளார்.
நான்கு நாட்கள் தமிழகத்தில் நடைப் பயணம் மேற்கொண்ட அவர், தமிழகம்- கேரளா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து, தற்போது கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நடைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பாறைச்சாலை சந்திப்பு பகுதியில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மற்றும் கேரள மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை: