ஞாயிறு, 25 மார்ச், 2018

சந்தையூர் .... இட ஒதுக்கீடு வாதம் கொஞ்சமும் பொருத்தமில்லாதது

Prabaharan Alagarsamy : சந்தையூர் தீண்டாமைச் சுவரை நியாயப்படுத்துவதற்காக ஆதிக்க தரப்பினர் எந்த அளவுக்கும் கூட போகத் தயாராகிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்காகதான் சந்தையூர் தீண்டாமைச் சுவர் சிக்கல் பெரிதாக்கப்படுவதாக சிலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார். கொஞ்சமாவது நியாய உணர்ச்சி இருப்பவர்கூட இப்படி பேசமாட்டார் என்று நிறைக்கிறேன்.
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கை என்பது முற்றிலும் சந்தையூர் பிரச்சனைக்கு தொடர்பில்லாதது. தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 3% உள் ஒதுக்கீடு போதாது அந்த அளவு உயர்த்தபடவேண்டும் என்கிற அவர்களுடைய கோரிக்கை என்பது அவர்களுடைய மக்கள் தொகையின் அடிப்படையில்தானே தவிர தங்கள் மீதான ஒடுக்குமுறையின் அளவுபடி அல்ல.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 3% அளவே அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகம், அவர்கள் கேட்கிற 6% என்பது மற்ற 75 பட்டியல் சாதியினரை பாதிக்கும் என்பது போன்ற விளக்கங்கெல்லாம் சந்தையூர் பிரச்சனைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதது. பிரச்சனையை திசைத்திருப்பி பிரிவினையை அதிகரிப்பதற்குதான் பயன்படுமேயன்றி தீர்ப்பதற்கு பயன்படாது!!!

கருத்துகள் இல்லை: