புதன், 6 டிசம்பர், 2017

ஆ.ராசா :நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!

நக்கீரன்  :  2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாக தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் அ.ராசா தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை முறைகேடு செய்ததாக தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி கனிமொழி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21ஆம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், தீர்ப்பு வழங்கப்படும் தேதியில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆ.ராசா, ‘இந்த வழக்கு குறித்த விசாரணையில் தீர்ப்பு வழங்க நான் ஒன்றும் நீதிபதி அல்ல.. சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரண குடிமகன். இந்த வழக்கில் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. நம் நாட்டின் நீதித்துறை மீதும், சிறப்பு நீதிமன்றத்தின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: