Shalin Maria Lawrence :
பாலிவுட்டின் பிரதான கபூர்
குடும்பத்தின் ஆண்களின் மேல் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை .
பிருத்விராஜ் கபூர் அக்பராய் வந்து மிரட்டிய மொஹாலியாசம் (Mughal-e-asam ) படத்தை சிறு வயதில் அடிக்கடி பார்த்து வைக்க ..பேரழகி மதுபாலாவை அவர் உயிரோடு வைத்து கல்லறை கட்ட ...குழந்தை மனம் அவரை இன்று வரை வில்லனாகதான் பார்த்துக்கொண்டிருக்கிறது .
ராஜ்கபூர்
அடுத்து வந்த ராஜ் கபூர் நன்றாகவே நடித்தாலும் ,சோகத்தை தவிர வேறெந்த பாவனையும் அந்த சீன ஜாடை கொண்ட முகம் காட்டாமல் போக ...காதல் காட்சிகளில் கூட அவர் முகம் சோகமாகவே தெரிந்தது .. அதிலும் அவர் ஒன்றும் தெரியாத அப்பாவியாகவே 90% படங்களில் நடித்து இருப்பார் ...அது ஒரு வகை எரிச்சலை ஏற்படுத்தியது .
பின்பு ராஜ் கபூரின் படங்களை பார்த்தது எல்லாமே அவைகளின் அற்புத இசைக்காகவும் பின்னே அவரின் கதாநாயகிகளுக்காகவும் .
நர்கிஸ் ,ஸினத் அமான்,மந்தாகினி ,சிமி கெரேவால் ,டிம்பிள் கபாடியா ,ஹேமாமலினி என்று அவர் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு கதாநாயகிகளையும் கவர்ச்சி மழையில் சொட்ட சொட்ட நனைய விட்டவர் ராஜ்கபூர் .
சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் ஸினத் அமான் காட்டப்பட விதம், மேரா நாம் ஜோக்கர் படத்தில் பத்மினி வெறும் ஒரு சட்டையோடு மழையில் நனைத்துக்கொண்டு வருவது ,ராம் தெறி கங்கா மைலி படத்தில் மந்தாகினி வெள்ளைப்புடவை அணிந்துகொண்டு அருவியில் குளிக்கும் காட்சி எல்லாம் வேறு லெவல். அழகியலுக்கும் ஆபாசத்திற்கும் நடுவே இருக்கும் ஒரு பெயர் இல்லாத பகுதி , அபாயகரமான zone அது.
ஒரு வயதுக்கு பின் குஸ்வந்த் சிங்கை படிக்க ஆரம்பித்த பின்பு ராஜ்கபூரின் நிஜ உலகம் ,அவரின் படு சல்லாப வாழ்க்கை ,பெண்கள் விஷயம் எல்லாம் தெரிய வந்தது . அந்த நொடி அவரின் அப்பாவி முகம் கண்ணமுன்னே வெடித்து சிதறியது . அவர் ஜோக்கர் வேடம் போட்டவர்தான் .
ப்ரித்வி ,ராஜ் கபூர் வரிசையில் அடுத்து வந்தது ஒரு நாட்டு வெடிகுண்டு .
ஷம்மி கபூர்
சர்க்கஸ் சாகசங்களை எல்லாம் ஒன்றாய் சேர்த்து மனிதனாய் உருக்கொடுத்தால் அதன் பெயர் ஷம்மி கபூர் .
நடனம் ,நகைச்சுவை இவரின் ஸ்பெஷியாலிட்டி.
அதிலும் அறுபதுகளில் பிரபலமான ராக் அண்ட் ரோல் இசைக்கு அவர் ஆடிய நடனங்கள் இன்று வரை நம்பர் ஒன் .அந்த காலத்தின் நடன புயல் அவர்தான் ...சாயலில் எல்விஸ் ப்ரஸ்லீ போல இருந்த காரணத்தினால் என்னவோ அவரின் நடன அசைவுகளை தன் நடிப்பில் அப்படியே கொண்டு வருவார் .
பரபரப்புகளின் ,வாழ்வின் பைத்தியகாரத்தனமான கொண்டாடங்களின் இருப்பிடம் ஷம்மி கபூர் .
இவரின் அதிக படங்களை சிவாஜி கணேசன் அவர்கள் தமிழில் ரீமேக் செய்து நடித்துள்ளார் ,அதில் முக்கிய படம் "எங்க மாமா" .
இவரின் துடிப்பான சேஷ்டைகளின் சாயல்தான் கரீனா கபூரின் நடிப்பில் தெரிகிறது.
இப்படி நாடகத்தனமும் ,அதிக பணமும் ,புகழும் ,பந்தாக்களும் நிறைந்த கபூர் குடும்பத்தில் தவறி பிறந்தவர் 'சஷி கபூர்'.
எளிமையின் அடையாளம் அவர்.
கபூர் ஆண்களின் சீன சாயல் இல்லாத ஒரு முகம் .கூர் மூக்கு ,அழகிய கண்கள் ,அரிசி பல் வசீகர புன்னகயை கொண்டவர் .
உப்பிபோன கபூர் குடும்பத்து ஆண்கள் போல இல்லாமல் ,நன்றாக இஸ்திரி போட்ட சட்டையை போல் கச்சிதமாக இருந்தவர் சஷி கபூர் .
படங்களிலும் சரி ,நிஜ வாழ்க்கையில் சரி கண்ணியத்தின் மறு பெயர் சஷி கபூர் .
பார்க்க எழுபதுகளின் ஹாலிவுட் ஹீரோ போல் இருப்பார் .அதே காரணமோ என்னமோ அதிக அளவில் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் .
அங்கிலேயே பெண் ஒருவரையே மணமும் முடித்தார் . என்னை பொறுத்தவரை அவரின் தோற்றம் ,வாழ்க்கை ,தொழில் எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்பொழுது அவர் ஒரு வெள்ளைக்காரரேதான் .
அவரின் தந்தை தோற்றுவித்த 'ப்ரித்வி தியேட்டர் 'ஐ வைத்து கொண்டு இந்தியாவில் நாடாகத்துறை யை வேறு அளவில் எடுத்து சென்றவர் . இந்தியாவில் ஆங்கில நாடாகங்களுக்கென்று ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் .
நேரு பற்றி ஒரு படம் எடுத்தால் அதில் இவரை நெருவாக நடிக்க வைத்திருந்தால் ,தோற்றத்தில் அப்படி பொருந்தி இருப்பார் .
எனக்கு மிகவும் பிடித்த தேவதை மனிதர் .
இன்று மறைந்துவிட்டார் .
அந்த அழகும் ,வசீகர ...இன்னும் கண்ணில் நிற்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக