தினமணி : மும்பை: மும்பை
காந்திப்படாவைச் சேர்ந்த சவிதா பாரதி (43) என்ற பெண் தன் கணவனைக் கொன்று
செப்டிக் டேங்கில் புதைத்து வைத்த சம்பவம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காந்திப்படாவில் சவிதா பார்தி(42) என்ற பெண் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற
போலீஸார் வீட்டை பரிசோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபச்சாரத் தொழில்
ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், சவிதா பார்தி
மற்றும் வாடிக்கையாளர் ஒருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் பல கொலைகள்
செய்துள்ளதாகவும், சொந்தக் கணவரையே கொலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அந்தத் தகவலின் அடிப்படையில் அவர் வீட்டை மீண்டும் போலீஸார் சோதனை
செய்தனர். சோதனையின் போது செப்டிக் டேங்க்கில் அழுகிய நிலையில் எலும்பு
கூடுகளாக இருந்த அவரது கணவர் சேதேவ்வின் உடலைக் கண்டு போலீஸார்
அதிர்ச்சியடைந்தனர்.
சவீதா பாரதி - சேதேவுக்கு இரு குழந்தைகள்
உள்ளனர். இந்நிலையில், சவீதாபாரதிக்கு கமலேஷ் என்வருடன் கள்ளகாதல்
இருந்துவந்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு கணவர்
சேதேவ் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை தலையில் அடித்து கொன்று பாத்ரூம்
அருகில் உள்ள செப்டிக் டேங்கில் அவரது உடலை தூக்கி எறிந்தாக
தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட
விசாரணையில், கணவருடன் சேர்த்து மேலும் 2 பேரை கொலை செய்துள்ளதாகவும்
தெரியவந்துள்ளது. இதையடுத்து
சவிதா பாரதியை பால்கார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து
தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக