Mathi - Oneindia Tamil
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54% வாக்குகள் பெற்றி
வெற்றி முகத்துடன் இருப்பதாக நியூஸ் நேஷனல் சர்வே முடிவுகள்
தெரிவித்துள்ளன. 22 ஆண்டுகாலமாக ஆளும் பாஜக இத்தேர்தலில் 41%
வாக்குகளைத்தான் பெறும் என்கிறது நியூஸ் நேஷனல் சர்வே முடிவுகள்.
குஜராத் சட்டசபைக்கான தேர்தல்கள் டிசம்பர் 9, 14 ஆகிய இரு நாட்கள் நடைபெற
உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி
எண்ணப்படுகின்றன.
Gujarat elections 2017: Congress is leading with 54 percent: News Nation
survey
இத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு
வருகின்றன. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக வெல்லும் என
கூறப்பட்டாலும் கடந்த தேர்தலைவிட குறைவாகத்தான் இடங்கள் கிடைக்கும் என்பது
தெளிவாகி உள்ளது.
சில கருத்து கணிப்புகளில் தனிப்பெரும்பான்மைக்கே பாஜக அல்லாடும் நிலை
ஏற்படும் என்று கூட தெரிவிக்கபபட்டுள்ளது. இதனிடையே இன்று இரவு வெளியான
நியூஸ் நேஷனல் டிவி சர்வேயில் காங்கிரஸ் கட்சி 54% வாக்குகளைப் பெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் 22 ஆண்டுகாலம் குஜராத்தை ஆண்டு வரும் பாஜகவுக்கு 41%
வாக்குகள்தான் கிடைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் முடிவுகள். இருப்பினும் 5%
வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்த எந்த முடிவையும் சொல்ல முடியாது எனவும்
தெரிவித்துள்ளனர். tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக