வியாழன், 22 ஜூன், 2017

மீராகுமாருக்கு கிடைத்த யானை பலம்? மாயவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு!

லக்னோ: ஜனாதிபதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்க்கட்சிகளின்
வேட்பாளரான மீராகுமாரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று மாயாவதி தெரிவித்தார்.அடுத்த மாதம் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்தரவர் என்பதால் அவருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ராம்நாத்துக்கு ஆதரவு தர ஒப்புக் கொண்டன.

எனினும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் , சமாஜவாதி கட்சியும் மதில் மேல் உள்ள பூனை போல் இருந்தனர். மாயாவதியோ ராம்நாத் கோவிந்தை காட்டிலும் சிறப்பான தலித் தலைவரை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால் அவருக்கு தம் கட்சி வாக்களிக்கும் என்றும் இல்லையெனில் ராம்நாத்துக்குதான் தம் ஆதரவு என்று தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ராம்நாத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தின. இறுதியில் வலிமையான மீராகுமாரை வேட்பாளராக அறிவித்தன. இதையடுத்து மீராகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக மாயாவதி கூறியுள்ளார்  tamiloneinidia

கருத்துகள் இல்லை: