சனி, 24 ஜூன், 2017

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா.. FIR- ல் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி!

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரையும் குறிப்பிடாதது ஏன் என்று  சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை அளிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 8 கேள்விகளை எழுப்பியிருந்தார்.அதில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம்,  பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர  பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்  என்று வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இது  சம்பந்தமாக தேர்தல் ஆணையம் அனைத்து ஆவணங்களையும்  தாக்கல் செய்யவும், காவல்துறை தரப்பில் வழக்கு தொடர்பான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

;இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன்,சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் இந்த ஆவணம் நீதிமன்றத்திற்கு மட்டும் என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஏற்கனவே ஆர்டிஐ  தகவல் வெளியான நிலையில், ஏன் நீதிமன்றத்துக்கு மட்டும்? என்று  கேள்வி எழுப்பினார். அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,  "அது தலைமை தேர்தல் அதிகாரிக்கு மட்டுமே அனுப்பப்பட்ட நகல் எனவே யாருக்கும் கொடுக்க இயலாது" என தெரிவித்தார். மேலும் அதில்  வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணப்படுவாடா தொடர்பான பட்டியலும், புகார்களும் உள்ளது என்றார்.  இதனையடுத்து காவல்துறை தரப்பில் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சிடியாக  தாக்கல் செய்தனர்.;

அப்போது நீதிபதிகள் வருமான வரித்துறை அறிக்கையில் பணம் பட்டுவாடா தொடர்பாக மூன்று பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்  பெயர்  என்ற இடம்  காலியாக உள்ளது.  ஏன் பெயர் குறிப்பிடவில்லை ?  என மீண்டும் காவல்துறைக்கு  கேள்வி எழுப்பினர்.  அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் எந்த  பதிலும் அளிக்கவில்லை;"

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.  nakkeeran <- span="">

கருத்துகள் இல்லை: