செவ்வாய், 13 ஜூன், 2017

சென்னை முதியவரை உயிருடன் எரிக்க முயற்சி : நால்வர் கைது!

முதியவரை உயிருடன் எரிக்க முயற்சி : நால்வர் கைது!சென்னை கோடம்பாக்கத்தில் முதியவர் ஒருவரை உயிருடன் எரிக்க முயற்சி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் அருகே கடந்த ஜூன் 4ஆம் தேதி ஆதரவற்று சாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஜப்பார் என்ற முதியவர் மீது 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது தன்னை காத்துக் கொள்வதற்காக அந்த முதியவர் எழுந்திருக்க முடியாமல் நகர்ந்து செல்கிறார். இதைக்கண்ட அந்த இளைஞர்களுள் ஒருவர் முதியவரின் தலையில் அடிக்கிறார். இறுதியில் முதியவர் மெதுவாக நகர்ந்து சென்று தீயை அணைத்துக்கொள்கிறார். இந்தக் காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கோடம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ ஓட்டுநர் புகழேந்தி, மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஷியாமின் தாயை அந்த முதியவர் கடுமையாக திட்டியதாகவும் அதன் காரணமாகவே நண்பர்களுடன் சேர்ந்து ஜப்பாரை உயிருடன் எரிக்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தவறு செய்த சிறுவர்கள் இருவரும் புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்திலும், ஷியாம் மற்றும் புகழேந்தி ஆகிய இருவரும் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: