வியாழன், 15 ஜூன், 2017

பணப்பேரம் நடந்ததை தமீம் அன்சாரி ஒப்புகொண்டார்!

thetimestamil.com :அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறிய போது, உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் கூறுங்கள் என்றார்.

கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என அமைச்சர் செங்கோட்டையனிடன் தமிமுன் அன்சாரி சொன்னதாகச் சொல்வது எம் எல் ஏக்களை பிடிக்கும் குதிரை பேரம் நடந்திருப்பதையே சுட்டுகிறது. நான் பணம் வாங்க மறுத்ததை சொல்ல வந்த அன்சாரி, பேரம் நடந்ததையும் போகிறபோக்கில் சொல்லிவிட்டார்.

கருத்துகள் இல்லை: