வியாழன், 15 ஜூன், 2017

அமெரிக்க ஆளும் கட்சி கொறடா சுட்டு கொலை! வர்ஜினியாவில் டொனால்ட் ட்ரம்ப் கட்சியின் ..


அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிரம்பின் குடியரசு கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழந்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபகாலமாக பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அமெரிக்கா மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடியரசுக் கட்சி கொறடாவும், டிரம்ப் அவையில் முக்கிய பொறுப்பில் உள்ளருமான ஸ்டீவ் ஸ்கேலிஸ் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஸ்டீவ் ஸ்கேலிஸ் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் படுகாயமடைந்து அருகிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஸ்கேலிஸின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும், சிகிச்சை அளிக்கும் போதே அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஸ்கேலிசுடன் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விர்ஜினியா போலீசார், துப்பாகிச்சூடு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார், மர்ம நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இல்லியோனிஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் டி ஹாட்கின்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதிபர் தேர்தலின் போது, ஹாட்கின்சன் சமூக வலைதளங்களில் டிரம்ப்க்கு எதிராக பரப்புரை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்< மாலைமலர்

கருத்துகள் இல்லை: