வியாழன், 15 ஜூன், 2017

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு: மத்திய-தெற்காசியாவில் இந்தியா முதலிடம்

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில், மத்திய தெற்காசிய அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 60-வது இடத்தில் உள்ளது. சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு: மத்திய-தெற்காசியாவில் இந்தியா முதலிடம் புதுடெல்லி: சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கார்னெல் பல்கலைக்கழகம், இன்சீட் மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (விப்போ) இணைந்து வெளியிட்ட இந்த பட்டியலில், இந்தியா 60-வது இடத்தில் உள்ளது. மத்திய மற்றும் தெற்காசியாவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முன்னேறியிருப்பதன் மூலம் கண்டுபிடிப்புத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துவருகிறது. 127 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவை முந்திய சீனா 22-ம் இடத்தில் உள்ளது.
இதுபற்றி இந்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘2015-ம் ஆண்டு கண்டுபிடிப்பு தரநிலையில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு 66-வது இடத்திற்கு முன்னேறியது. இப்போது 60-வது இடத்திற்கு வந்துள்ளது. 5 ஆண்டுகள் தொடர்ந்து பின்தங்கியிருந்த நிலையில் இருந்து இந்த முன்னேற்றம் வந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வர்த்தகத் துறை மந்திரியின் வழிகாட்டுதலின்படி, கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் பெரும் உயரங்களை அடைவதற்கு இந்தியாவின் திறனைக் கண்டறிந்து ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்

கருத்துகள் இல்லை: