வியாழன், 15 ஜூன், 2017

பாஜக எம் பி :தமிழக கிராம மக்கள் ஆங்கிலம், இந்தி இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும்."

Chandra Mohan:
பாஜக எம்.பி.க்கள் தமிழக மக்களிடம் காமெடி செய்கிறார்களா ? தருண் விஜய் எம்.பி சொன்னார் : " கருப்பு நிற திராவிடர்களுடன் சகித்துக் கொண்டிருக்கவில்லையா ?" இந்தப் பேச்சுக்காக நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இந்த முறை ரூபா கங்குலி எம்.பி. அவர் தமிழ்நாடு வந்தவுடன் சொன்னார் :- "தமிழக கிராமப்புற மக்கள் அனைவரும் ஆங்கிலம், இந்தி இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும்." திருப்பூரில் பக்தி பரவசத்துடன் கோவிலில் நடனமாடிய பாஜக எம்.பி ரூபா கங்குலி மே.வங்கத்தைச் சார்ந்த நடிகையும் ஆவார். மே.வங்கத்தின் கிராமங்களில் இப்படி பேசினால் அவருக்கு நல்ல "வரவேற்பு " கிடைக்கும்.
தமிழகத்திலும், கேரளாவிலும் பல்வேறு வேலைகளைச் செய்யும் சுமார் 25 இலட்சம் புலம் பெயர்ந்த இளம் தொழிலாளர்களில் கணிசமானோர் இந்தி பேசுபவர்கள் ஆவர் ; வங்காள இளைஞர்களும் உண்டு.
ரூபா கங்கூலி இந்தி பேசும் மாநிலங்களில் சென்று சொல்வாரா?
"மக்களே, பிழைப்புக்காக தமிழ் நாடு, கேரளாவுக்கு நீங்கள் எல்லாம் செல்வதால் தமிழ், மலையாளம் இரண்டையும் கட்டாயம் படிக்க வேண்டும் " எனச் சொல்வாரா?

#எச்சரிக்கை !
தமிழ் நாடு மக்கள் என்பதால், ஆட்டம் போடுவது, வாயில் வந்ததைப் பேசுவது எனக் காமெடி எதுவும் செய்யாதீர்கள் ரூபா!
தமிழ் நாட்டில்,
மொழிப் பிரச்சினையில் இப்படி கருத்து சொல்வது நெருப்போடு விளையாடுவது போல

கருத்துகள் இல்லை: