வியாழன், 27 நவம்பர், 2014

ஜெயந்தி நடராஜன் பா.ஜ.,வில் சேர முயற்சிக்கிறார்? முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் பேத்தி!


தேசிய அரசியலில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் விஷயமாக, நடிகை குஷ்பு, நேற்று காங்கிரசில் சேர்ந்தார். அதே நேரத்தில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பா.ஜ.,வில் சேருவதற்கு, நாள் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் பரவி, காங்கிரசில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் இருந்து விலகிய குஷ்பு, எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார். திடீரென்று, நேற்று டில்லியில், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, காங்கிரசில் இணைந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்., தலைவர் இளங்கோவனும் உடனிருந்தார். இதற்கிடையில், தமிழக காங்கிரசை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜெயந்தி நடராஜன், காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ரொம்ப சந்தோசம். இவரால் காங்கிரஸ் - க்கு எந்த பிரயோஜனமும் இல்லை
வசூல் ராணி என்று விமர்சிக்கபட்டவரை சேர்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது?
கடந்த ஐ.மு., கூட்டணி அரசில், சுற்றுச் சுழல் மற்றும் வனத் துறை அமைச்சராக, ஜெயந்தி நடராஜன் பொறுப்பேற்றிருந்தார். சுற்றுச் சூழல் அனுமதி தொடர்பான கோப்புகள், அவரது இலாகாவில் தேக்கம் அடைந்திருப்பதாக, தொழிலதிபர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு, ராகுல் உத்தரவிட்டார். அதன்பின், ஜெயந்தியின் செல்வாக்கும், முக்கியத்துவமும் கட்சியில் சரியத் துவங்கியது. குறிப்பாக ராகுலுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாகியதை அடுத்து, லோக்சபா தேர்தலுக்கு பின், கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தார். தமிழக காங்., சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்டவில்லை.



டில்லிக்கு அழைத்து...:

வாசன் பிரிவை அடுத்து, தமிழக காங்., தலைவர்களை எல்லாம், சோனியாவும், ராகுலும் டில்லிக்கு அழைத்துப் பேசினர். அந்த சந்திப்பிலும், ஜெயந்தி கலந்து கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக, சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் சிலை திறப்பு விழா நடந்தது. அதற்கும் ஜெயந்தி செல்லவில்லை. சில நாட்களுக்கு முன், டில்லியில், நேரு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க விழா நடந்தது. அதற்கும் ஜெயந்தி போகவில்லை. இப்படி தொடர்ச்சியாக, காங்., நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் ஜெயந்தி, பா.ஜ., கட்சியில் இணைய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில், டில்லியில் முகாமிட்டிருந்த அவர், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரை சந்தித்துப் பேசியதாக, டில்லி பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆலோசனை:

சமீபத்தில் சென்னையில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஜெயந்தி, ராகுலுடனான கருத்து வேறுபாடுகள் குறித்தும், கட்சியில் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், கவலை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி, ஜெயந்தி நடராஜனிடம் கேட்டதற்கு, தற்போது வெளியூரில் இருப்பதாகவும், சென்னை திரும்பியதும், இதுபற்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: