வெள்ளி, 28 நவம்பர், 2014

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்

ன்பார்ந்த, இளைஞர்களே ! மாணவர்களே !
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரஹாரமும்இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக திரைப்படங்கள் உள்ளன. திரைப்படங்கள் இன்றைய அரசியலின் கண்ணாடியாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கதாநாயகன் என்பவனை பொது நோக்கம் கொண்டவனாகவும், அநியாயத்தை தட்டிக் கேட்பவனாகவும் திரைப்படங்கள் காட்டின.
இன்றைக்கு திரைப்படங்களில் கதாநாயகன் யார் ! வில்லன் யார் ! என்கிற வித்தியாசம் தெரியவில்லை. ‘திருட்டு பயலே’ படத்தில் மேட்டுக்குடிகளின் தவறான “அந்தரங்க” உறவை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்பவன் கதாநாயகன். நான்கு பெண்களை ஏமாற்றி விட்டு “நான் அவன் இல்லை” என்று நீதி மன்றத்தில் பேசுபவன் கதாநாயகன். “மங்காத்தா” படத்தில் 500 கோடியை ஆட்டையை போட சுட்டு வீழ்த்துகிறவன் கதாநாயகன். சதுரங்க வேட்டையில் உன்னை ஏமாற்றுகிறவனை குருவாக ஏற்றுக்கொள் என்றும் “குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யும் எந்தத் தவறும் தவறு இல்லை” என்றும் கூறுகிறான் கதாநாயகன்.

சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரஹாரமும்
தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, சங்கிலி அறுப்பது என கதாநாயகன் வில்லனாக எப்படி மாறினான்? கள்ளச்சாராயம் விற்பவன் “கல்வி தந்தை”, மலைகளையும், ஆற்று மணலையும் கொள்ளையடிப்பவன் மாவீரனாக மாறும் போது இன்றைய சினிமாவில் வில்லன் கதாநாயகனாக மாறுவதில் வியப்பில்லை.
திரைப்படங்கள் இதுபோல் வருவதற்கு மக்களின் ரசனை மாற்றம்தான் காரணம் என்றும், திரைப்படம் தான் மக்களின் ரசனையை மாற்றுகிறது என்றும் பேசுவதைவிட, இது மாறியதற்கு உண்மையான காரணம் என்ன? இதை மாற்றுவதற்கு என்ன தீர்வு ? என்பதை
விவாதிக்க வாருங்கள் விவாத அரங்கத்திற்கு.
notice
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும்

சதுரங்க வேட்டையும்
பரப்பன அக்ரகாரமும்

விவாத மேடை அனைவரும் வருக…..வருக…….vinavu.com

கருத்துகள் இல்லை: