பின்னர் மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து கிராமத்தினர் மாரீஸ்வரனைக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தார் பாஸ்கரன்.
அப்போது சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வகுப்பறைக்குள் நுழைந்த மாரீஸ்வரன் கத்தியால் பாஸ்கரனை வயிறு மற்றும் முகத்தில் பல்வேறு இடங்களில் குத்தியும், வெட்டியும் உள்ளார். பின்னர் அவர் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி விட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாஸ்கரன் உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் சம்சுதீனிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
மறியல் போராட்டம்: தகவலறிந்த அயன்கரிசல்குளம் கிராம மக்கள் பாஸ்கரனை கொலை செய்த மாரீஸ்வரனை கைது செய்யக்கோரி அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடரும் துக்கம்
கடந்த 26-ஆம் தேதி கோபாலின் தாய் இறந்தார். இதற்காக மும்பையில் இருந்து வியாழக்கிழமை வந்த கோபால் தாயின் சடலத்தை அடக்கம் செய்தார்.
இதனால் பாஸ்கரன் அன்று பள்ளிக்குச் செல்லவில்லை. வெள்ளிக்கிழமை அவரை வற்புறுத்தி தாயார் தேவி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்ற அரை மணிநேரத்திற்குள் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது.
முதல்நாள் தாயார் இறந்திருந்த நிலையில், மறுநாள் மகன் கொலை செய்யப்பட்டதால் கோபால் குடும்பமும், அந்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.
""திருச்செந்தூரில் பாஸ்கரனை தவிக்க விட்டுவிட்டு வந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரை மாசார்பட்டி போலீஸார் உடனே விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது நாங்கள் எங்கள் மகனை இழந்திருக்க மாட்டோம்'' என்றார் கோபால்.dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக