
ஒரு படம் எடுப்பதற்கே கோடிக் கணக்கில் செலவாகும் இந்த காலத்தில் பாலு மகேந்திரா படத்தின் பட்ஜட் 90 லட்ச ரூபாய். சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் கதை பெரும்பாலும் ஒரே ஒரு வீட்டினுள் தான் இருக்குமாம்.
”ஒரு படம் நன்றாக வருவதற்கு படத்தின் பட்ஜட் காரணம் அல்ல. படத்தின் கதையும்,கதாபாத்திரங்களும் தான் முக்கிய காரணம் என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். கோடிகள் வேண்டாம், லட்சங்கள் போதும் கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு படம் எடுப்பதற்கு” என்று கூறியுள்ளார் பாலுமகேந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக