வியாழன், 2 பிப்ரவரி, 2012

விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரமானது-ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்வாதிகரமானது என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சட்டசபையிலிருந்து வெளிவந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகளுக்கு கருத்துக் கூற, பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது எதேச்சதிகார செயல். சர்வாதிகாரமானது.உரிமைக் குழுக் கூட்டத்தை அவசரம் அவசரமாக கூட்டி இந்த முடிவை எடுத்துள்ளனர். இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: