புதன், 1 பிப்ரவரி, 2012

பல்டி அடிக்கும் உதயகுமார்!கூடங்குளம் அணு உலைக்கு

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, "ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை' என கூறிய உதயகுமார், கூடங்குளத்தில், "போலீசார் சிறப்பாக செயல்பட்டு, அணு உலை ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்' என பாராட்டியதால், பொதுமக்கள் குழம்பியுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான, உதயகுமாரின் சட்ட அனுமதியில்லாத போராட்டத்திற்கு, போலீசார் தேவையான பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
நேற்று, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்திற்கு, திடீரென ஆட்களை திரட்டி வந்த உதயகுமார், அங்கு மனு அளிக்க வந்த, அணு உலை ஆதரவாளர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். அங்கு பேட்டி அளித்த அவர், "இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை; மதவெறியர்கள் வெறிச்செயலில் ஈடுபடுகின்றனர்' என, ஆவேசமாக கூறினார். பின், கூடங்குளத்திற்கு சென்ற அவர், அணு மின் நிலையம் காமராஜர் சிலை அருகே பேசுகையில், "நாம் ஆத்திரமடையக் கூடாது; போலீசார் நமக்கு சிறந்த பாதுகாப்பு தந்தனர். அணு உலை ஆதரவாளர்கள் மீது, வழக்கு பதிந்து விட்டனர். போலீசாருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்' என, மாற்றிப் பேசினார். திருநெல்வேலியில் பாதுகாப்பில்லை என, திட்டிப் பேசிய உதயகுமாரின் பேச்சைக் கேட்ட அவரது ஆதரவாளர்களே, கூடங்குளத்தில் அவரது பாராட்டு பேச்சைக் கேட்டு, குழம்பிப் போயினர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: