திங்கள், 30 ஜனவரி, 2012

அ.தி.மு.க. எம்.எல்ஏ.க்களையும் இழுத்து, தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையும் வெளியே

சூட்கேஸ் சகிதம் நடராஜன் அனுப்பிய இரண்டு பேர் வருகிறார்கள்!

Viruvirupu.com
சசிகலா சின்டிகேட் அ.தி.மு.க.-வுக்கு அரசியல் ரீதியாக சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்ற ஊகம் பரவலாக ஓடிக்கொண்டிருக்க, ஓசைப்படாமல் விஜயகாந்தின் தே.மு.தி.க.-வுக்கு ஆப்பு வைக்கும் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சசிகலா குரூப்பின் அரசியல் ஃபிலோசபர் நடராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கவர் பண்ணுவதற்கு தனது ஆட்கள் இருவரை சூட்கேஸ் சகிதம் இறக்கி விட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இது சில மாதங்களுக்கு முன், ‘வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன் என்கிறார்கள் விவகாரம் தெரிந்தவர்கள்.
சசிகலா குரூப் அ.தி.மு.க. பவர் சென்டராக இருந்த நாட்களில், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சிலர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.
“வேறு விதமாக’ தொடங்கப்பட்ட ஆபரேஷன்” என்று சொல்வதன் அர்த்தம், அப்போது தே.மு.தி.க.காரர்களை அ.தி.மு.க.-வுக்கு இழுக்க தொடங்கிய ஏற்பாடு அது.
அதில் பாதிக் கிணறுதான் இவர்களால் தாண்ட முடிந்தது. இவர்கள் எதிர்பார்த்த எம்.எல்.ஏ. எண்ணிக்கை கிடைக்கவில்லை. சில லட்சம் ரூபா அட்வான்ஸ் கொடுத்ததுடன் ஆபரேஷன் அபார்ட் பண்ணப்பட்டு விட்டது. (இந்த விவகாரம் விஜயகாந்த் காதுகளுக்கும் போக, அவரது அ.தி.மு.க. தாக்குதல்கள் சூடு பிடித்தன)
இப்போது காட்சிகள் மாறி, அப்போது இந்த ஆபரேஷனை தொடங்கிய ஆட்களே அ.தி.மு.க.-வில் இருந்து பூட் பண்ணப்பட்டு விட்டார்கள். புதிய கதையாக, 4 மாதங்களின்பின் வேறு விதமாக இந்த ஆபரேஷனை தொடங்க முயற்சிக்கிறார்கள். இம்முறை ஆபரேஷன், தே.மு.க. எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.-வுக்கு இழுப்பதல்ல. இது வேறு பிளான்.
அ.தி.மு.க.-வில் இருந்து சில ஆதரவு எம்.எல்ஏ.க்களையும் வெளியே இழுத்து, தே.மு.தி.க.-வில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களையும் வெளியே இழுத்து, தமக்கு ஆதரவான குழு ஒன்றை உருவாக்கி, அ.தி.மு.க.-வுக்கு (அல்லது ஜெயலலிதாவுக்கு) அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்துவதே இந்த பிளான் என்று சொல்லப்படுகிறது.
தே.மு.தி.க.-வில் முன்பு அட்வான்ஸ் கொடுத்து வைத்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தொடர்பு கொள்வதுடன், அப்போது சிக்காத தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களையும் வளைத்துப் போடும் முயற்சி நடப்பதாக தெரிகிறது.
நாம் அறிந்தவரை, இரு நபர்கள் இந்த ஆபரேஷனில் பம்பரமாக செயற்படுகிறார்கள். அட்வான்ஸ் கொடுக்க ரெடியாக சூட்கேசும் வைத்திருக்கிறார்கள். இருவரில் ஒருவர், முன்பு ஜாதிக்கட்சி ஒன்றில் ஆக்ட்டிவ்வாக இருந்த நபர்.
“விரைவில் ஆட்சி கைமாறப் போகிறது. உங்கள் வாழ்நாள் பூராவும் எதிர்க் கட்சியாக இருக்கப் போகிறீர்களா? அல்லது புதிய ஆட்சியில் அமைச்சராக போகிறீர்களா? என்ற கவர்ச்சிகரமான ஆஃபர், இந்த இருவரால் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று யாருக்கும் தெரியாத நிலையில், தே.மு.தி.க.-வின் எம்.எல்.ஏ.க்களில் எந்தனை பேர் இந்த பீன்ஸை கடிக்க முன்வருவார்கள் என்று பார்க்கலாம்

கருத்துகள் இல்லை: