வெள்ளி, 11 நவம்பர், 2011

தயாளு அம்மாள் எப்போது கூண்டில் ஏறுவார் தெரியுமா?

Viruvirupu< ew Delhi, dia: Dayalu Ammal would come to court to witness the case. But, when? Now she has been named as the 143rd prosecution witness by the CBI.
மிகவும் பரபரப்பான எதிர்பார்க்கப்பட்ட 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை முழுவதுமே விறுவிறுப்பாக இருக்கும் என்றாலும், தமிழகத்தில் பலரும் உச்சக்கட்ட ஆவலில் இருப்பது, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவருக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண்பதற்கே!
இந்த இருவரும் வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் விசாரிக்கப் படுவார்கள்.
சாட்சிகள் பட்டியலில் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளவர்களில் தமிழகத்தில் பிரபலமானவர், தயாளு அம்மாள்.
முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு, 150-க்கும் மேற்பட்ட சாட்சிகளை களத்தில் இறக்கவுள்ளது. இதில் இந்த மாதம் (நவம்பர்) முடிவதற்குள் 28 சாட்சிகளை விசாரித்து முடிப்பது என்று திட்டமிட்டுள்ளார்கள். இந்த வரிசையில் தயாளு அம்மாள் எங்கே வருகிறார்? அல்லது, எப்போது விசாரிக்கப்படுவார்?
சி.பி.ஐ. வட்டாரங்களில் நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, தயாளு அம்மாளை வழக்கின் தொடக்க (நவம்பர்) மாதத்தில் விசாரணைக்கு அழைக்கும் திட்டம் அவர்களிடம் கிடையாது. அவரது பெயர் சாட்சிகள் லிஸ்டின் மிடில்-ஆர்டரில் இருப்பதாகத் தெரிகிறது. (ஆனால், அவரது பெயரை சாட்சிகள் பட்டியலில் 143-வது பெயராக தற்போது வைத்திருக்கிறார்கள்)
டில்லி நீதித்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவலின்படி, ஸ்பெக்ட்ரம் வழக்கை பிராசிகியூஷன் தரப்பு இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் அணுகப் போகின்றது.
முதலாவது பிரிவு, ஊழலுக்கான திட்டமிடல், அது நடைபெற்ற விதம், அதில் சம்மந்தப்பட்டவர்கள், மற்றும் அதனால் பலனடைந்தவர்கள் என்ற விதத்தில் இருக்கும். இரண்டாவது பிரிவில், இதில் பெறப்பட்ட பணம் எந்தெந்த வழிகளில், எங்கேல்லாம் சென்று சேர்ந்தது என்ற விபரங்கள் அலசப்படும்.
இதில், முதலாவது பிரிவில் ஆ.ராசாவும், இரண்டாவது பிரிவில் கனிமொழியும் விசாரிக்கப்படுவார்கள். தயாளு அம்மான் சாட்சியாக விசாரிக்கப்பட உள்ளதும், இரண்டாவது பிரிவில்தான்.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் பெறப்பட்ட பணம், கலைஞர் டி.வி. ஊடாக சென்னைக்கு வந்து சேர்ந்தது என்பது சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. கலைஞர் டி.வி.யின் சிறிய பங்குதாரரான கனிமொழி குற்றம் சாட்டப்பட்டவர்களில் பட்டியலில் உள்ளார். பெரிய பங்குதாரரான தயாளு அம்மாள்மீது குற்றம் சுமத்தப்படவில்லை. அவர் சாட்சிகளின் பட்டியலில் உள்ளார். (கலைஞர் டி.வி.யில் கனிமொழி ஆக்டிவ் பார்ட்னர் எனவும், தயாளு அம்மாள் சிலீப்பிங் பார்ட்னர் என்றும் கேஸ் நோட்ஸ் சொல்கின்றன)
இது அவர்களது குடும்பத்துக்குள் நடைபெற்ற ‘விட்டுக் கொடுத்தல்’ அல்லது, அட்ஜஸ்ட்மென்ட் என்று ஒரு பேச்சு உள்ளது. வழக்கு நடக்கத் தொடங்கி உச்சக்கட்டத்துக்கு போகும்போது, அதை அவர்களால் அப்படியே மெயின்டெயின் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.
இங்கே இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒரேயொரு நபர், ஆ.ராசாதான். கோயிங்-வித்-த-ஃபுளோவில் ராசா இருந்தால் சிக்கல் கிடையாது. இடையே அவர் முறுகிக் கொண்டால்தான், தயாளு அம்மாளின் பெயர் ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் வரவில்லை என்ற கேள்வி எழும்.
அப்படி எழுந்தால்தான் கோபாலபுரத்துக்கு மகா சிக்கலும், சி.பி.ஐ.-க்கு மகா சங்கடமும் ஏற்படும்.
தற்போதுள்ள நிலையில் ஆ.ராசா இவர்களோடு முழுமையான ஒத்துழைத்துக் கொண்டுள்ளார் என்பதால், கோபாலபுரம் தற்காலிகமாக தயாளு அம்மாள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இந்த வகையில் பார்த்தால், சி.பி.ஐ. தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதவரை, தயாளு அம்மாள் கூண்டில் ஏறப்போவது, அடுத்த மாத இறுதியில்தான்.
ஆனால், இந்த “ராசாவின் மனசிலே” எப்போதுமே ஒரு ரிஸ்க்-ஃபாக்டர்தான்!

கருத்துகள் இல்லை: