அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார்.
தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற வழக்கு காரணமாக தான் படாத பாடு பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
குற்ற வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலாக ஒரு கோடி டொலர்கள் அபராதம் செலுத்துமாறும், முறைகேட்டின் காரணமாக சம்பாதித்த 5 கோடியே 40 லட்சம் டொலர்களை திரும்ப செலுத்துமாறும் ராஜரட்ணம் ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ரக்கோஃப், அமெரிக்க நிதி ஒருங்குபடுத்தினர்களுக்கு சாதகமாக முடிவு செய்துள்ளார்.
ஒரு தனி நபருக்கு எதிராக வழங்கப்பட்ட மிகவும் பெரிய அபராதமான இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, இந்தத் தொகையை விட ராஜரட்ணம் சம்பாதித்தது மிகவும் அதிகம் என்று கூறியுள்ளார்.
சிவில் மற்றும் குற்ற வழக்குகளுக்கான அபராதமாக ராஜரட்ணம் தற்போது ஒட்டு மொத்தமாக 15 கோடியே 60 லட்சம் டொலர்களுக்கும் அதிகமாக செலுத்தியாக வேண்டும்.
உட் தகவல்களை பெற்று சட்டவிரோதமாக செய்யும் வணிகம் குறித்து தண்டிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களில் ராஜ் ராஜரட்ணமும் ஒருவராவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக