செவ்வாய், 8 நவம்பர், 2011

மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கு: மருத்துவர் முர்ரே குற்றவாளி


மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கில், அவரது மருத்துவர் முர்ரே குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற இந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 வாரங்களாக நடந்த விசாரணையில் மருத்துவர் எதிராக 300 ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 49 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். போதைக்கு அடிமையான ஜாக்சன், மயக்க மருந்தை தனக்கு தானே செலுத்திக்கொண்டதால், உயிரிழந்ததாக மருத்துவர் முர்ரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கில், அவரது மருத்துவர் முர்ரே குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி மைக்கேல் பாஸ்டர் கூறுகையில், முர்ரேவின் கவனக்குறைவான செயல்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். பொதுமக்கள் நலனை விட்டுக்கொடுக்க இயலாது. மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு அவரை ரிமாண்ட் செய்வது அவசியம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஷெரிப்பின் கஷ்டடியில் முர்ரேவை வைக்கிறேன். ஜாமின் கிடையாது என்றார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், மருத்துவர் முர்ரேவின் கையில் விலங்கு மாட்டி, போலீசார் அழைத்துச் சென்றனர். அவருக்கான தண்டனை விபரம் வரும் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது. குறைந்தது 4 வருட சிறை தண்டனையும், மருத்துவம் செய்வதற்கான தடையும் விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதால், மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை: