பெங்களூர்: நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்றா விட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தலித் க்ரிய சமிதி எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் குருபூர்ணிமா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதம் பவுர்ணமி தினமாக குருபூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆன்மிக பெரியவர்கள், குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அணுகி வாழ்த்து பெறுவது வழக்கம். சிறப்புமிக்க இந்த தினம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கேளிக்கை விழாவாக நடந்துள்ளது.
நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தலித் க்ரிய சமிதி சார்பில் ஷிமோகாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அமைப்பின் தலைவர் பகவான் அளித்த பேட்டியில், ‘‘உலகம் முழுவதும் குருக்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தும் விழாவாக குருபூர்ணிமா கொண்டாடப்படு கிறது. இந்த புனித நாளில் நடிகை, பக்தைகளை ஆட வைத்து, அதை அலங்கார தேரில் வலம் வந்து நித்யானந்தா ரசித்துள்ளார். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டிய கால கட்டத்தில், அவற்றுக்கு மக்களை மீண்டும் அழைத்துச் செல்லும் முயற்சியில் நித்யானந்தா ஈடுபட்டுள்ளார். ஆன்மிக புனிதர்கள் பலர் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் நித்தியானந்தா போன்றவர்கள் இருப்பது கர்நாடகாவின் கவுரவத்துக்கு இழுக்கு. எனவே, அரசு அவரை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்து வோம்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக