செவ்வாய், 19 அக்டோபர், 2010

1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதத்தால்

2010 கருப்பு ஒக்டோபர் நினைவாக!
வடமாகாண முஸ்லிம்களில் புலிகளினால் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தி முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு
(M. ஷாமில் முஹம்மட்!)
1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதத்தால் வெளியேற்றபட்டனர். அவர்களின் அனைத்து அசையும் அசையாச் சொத்துகள் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது. கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் சில மணித்தியால அவகாசத்தில் அனைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர். அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை 20 ஆண்டுகள் பூர்த்தியான நிலையிலும் விடிவு இன்றி தொடர்கின்றது.

வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலட்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர். இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது. ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக, நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள். 20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுப்பதுடன், அவர்களின் மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது.
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும். தமிழ் மக்களின் மனிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம்களின் பிரச்சனையை அணுகமுடியாது அப்படியான அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருக்கும்.

தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது, அவர்கள் இறுதி யுத்தத்தின் போது புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள். ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து அல்லது வந்த அதே தொகையினர் மீள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள். இது ஒரு குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது. ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்கபடுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது.

இப்போது இருக்கும் மொத்த வட மாகான முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் தீர்வு கிடைக்க கூடிய அரச கொள்கை ஒன்று வேண்டும். 20வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டையும் ஒரு கடையையும் இழந்த ஒருவரின் குடும்பம் இன்று மூன்று குடும்பமாக இருக்கும் போது இரு இரு தரப்புக்கும் ஒரு விதமான மீள் குடியேற்ற முறை முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் பற்றிய அரச கொள்கை ஒன்று உருவாக்கபட வேண்டும், அந்த கொள்கையின் அடிப்படையில் மீள் குடியேற்றம் இடம் பெற வேண்டும். அதுவரை வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது அரசியல் வசனங்களாக மட்டுமாகத்தான் இருக்க போகின்றது.

நான்கு குடும்பமாக இருக்கும் மக்களிடம் ஒரு உடைந்து தகர்ந்து கிடக்கும் ஒரு சிறிய இடத்தை காட்டி இங்கு நீங்கள் வந்து குடியேறுங்கள் உங்களுக்கு 100 வீத பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என்றால் அது மீள் குடியேற்றத்தை செய்வதற்கு போதுமாகாது. 20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இருந்த இடங்களிலும் அதற்கு சுற்று புறங்களிலும் காணிகள் தெரிவு செய்யப்பட்டு புதிய குடியிருப்புகள் உருவாக்கபடவேண்டும். புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் கட்டி கொடுக்கப் படவேண்டும், தொழில் வசதிகள் செய்து கொடுக்கப் படவேண்டும். இவை மட்டும்தான் முஸ்லிம் மீள் குடியேற்றம் என்பதை சரியாக உருவகப் படுத்த முடியும்.

அதேபோன்று விரும்பியவர்கள் விரும்பிய இடங்களில் வாழ அரசு முழு உதவிகளையும் செய்யவேண்டும். புத்தளத்தில் வாழ விரும்பும் குடும்பங்கள் புத்தளத்திலும் கொழும்பிலும் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் வாழ விரும்பும் குடும்பங்களுக்கு அந்த இடங்களிலும் வாழ அரசு உதவிகளை செய்ய முன்வரவேண்டும். இந்த வருடம் மே மாதத்துக்கு முன்னர் அனைத்து வடமாகாண முஸ்லிம்களும் மீள் குடியேற்றப்படுவர் என்று கடந்த வருடம் ஜனாதிபதி உறுதியளித்தார் எனிலும் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற 5 வீதத்தைக் கூட கடந்ததாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: