சனி, 23 அக்டோபர், 2010

Swiss.சுவிஸில் ஈழத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது

சுவிற்சலாந்தின் பேர்ண் நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஈழத் தமிழர்கள் ஒரு தொகையினரிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் அவர்களில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள்.இதைத் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்து ஈழத் தமிழர்கள் பதினொரு பேரை பேர்ண் நகரப் பொலிஸார் கைது செய்துகொண்டு போனார்கள்.
கடந்த வியாழக்கிழமை மாலை மோதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஆரம்ப மோதலின்போதே உணவக உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.பொலிஸார் வந்து பார்த்தபோது தமிழர் ஒருவர் காயப்பட்டு இருந்தார். பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு தமிழரைக் கைது செய்து கொண்டு போனார்கள்.
ஆனால் சில மணி நேரங்களில் அங்கு மோதல் தொடர்ந்தது. உக்கிரம் ஆனது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் வந்து பார்த்தபோது இன்னொரு தமிழர் காயப்பட்டுக் கிடந்தார். சண்டை முற்றி இருந்தது. காரசாரமான வாய்த் தர்க்கமும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அடிபாடு நடந்தது.
பொலிஸார் அங்கிருந்து பத்துத் தமிழர்களை கைது செய்து கொண்டு போனார்கள். மோதலின் பின்னணி என்ன? என்பது குறித்துப் பொலிஸார் புலனாய்வு விசாரணை முடுக்கி விட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்களின் உதவி, ஒத்தாசைகளை விசாரணைக்காக கோரி உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: