சனி, 23 அக்டோபர், 2010

ஈராக் - தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன. 
 
இந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர்  கொலை : இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர். 
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-10-23 15:38:39 IST
இந்த நிகழ்ச்சியை இராக் மக்கள் வழியாக பார்த்தால் ஒசாமா பின் லேடன் ஒரு ஹீரோ தான். அமெரிக்க என்ற காட்டு வெறி பூனைக்கு மணிகட்டி இன்று வரை அமெரிக்காவை உறங்காமல் வைத்துள்ளார். வருங்காலத்தில் அமெரிக்கா க்கு ஹிட்லருக்கு இப்போ இருக்கும் மதிப்புதான் கிடைக்கும்....
சுதேசி - பரமக்குடி,இந்தியா
2010-10-23 15:34:23 IST
சர்வதேச போர் விதிகளை அப்பட்டமாக மீறியுள்ள அமெரிக்காவை எதிர்த்து UN மற்றும் உலக நாடுகள் போர் புரிய தயாரா? அல்லது கண்டனம் என்று வாய்க்குள்ளேயே முனகப் போகிரார்களா? மீடியாவும் அல்லவே இவர்களுக்கு உடந்தையாக இருக்கிறது. மற்ற நாட்டின் உள் நாட்டுப் பிரச்சனைக்குள் தானாக நுழைந்து, யாரையும் கேட்காமல் அவர்களின் மீது போர் புரியும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு யார்தான் முடிவு கட்டுவது....
hussain - jahra,குவைத்
2010-10-23 15:31:40 IST
நாட்டமை அமெரிக்க யோக்யதை இப்ப விளங்குதா. அமரிக்க பன்னாடைகளை ஆத்ரிக்கும் புன்னியவான்கள் இனிமேலாவது கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டும்,...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-23 15:30:32 IST
இதே மாதிரி இலங்கைல நடந்துக்கிட்டிருக்கிற அட்டூழியங்களையும் யாராச்சும் வெளிச்சம் போட்டு காட்டணும்..இராக்குக்காவது சப்போர்ட் பண்றதுக்கு நாலு நாடுகள் இருக்கு..இலங்கை தமிழர்களுக்கு அதுவும் கிடையாது..இத்தனை பேர் வாயில் விழுந்து சாபத்தை சம்பாதிக்கும் அமேரிக்கா,கூடிய சீக்கிரம் அழிவை சந்திக்க போகிறது......
durai moni - riyadh,இந்தியா
2010-10-23 15:05:48 IST
is this demogracy in america & including UNO?...
சுதாகர் கே - மதுரை,இந்தியா
2010-10-23 15:02:15 IST
சூப்பர்...
ரபீக் - துபாய்,இந்தியா
2010-10-23 14:31:51 IST
இந்த மாதிரி தப்பு பண்ணிய அமெரிக்காவை கண்டிப்பாக எல்லா நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அது மட்டும் அல்ல ஈராக் நாட்டுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எல்லா நாடும் வலியுறுத்த வேண்டும் என்னுடைய கருது. ( அமெரிக்கா ஒழிக ) சுய நலவாதிகள் இருக்கும் ஒரு பயங்கரமான நாடு ( அமெரிக்க) தான் வாழ பிறரை கொள்ளும் கொடுமை கர நாடு....
திரு - சென்னை,இந்தியா
2010-10-23 14:29:28 IST
விக்கிலீக்ஸ் இது போன்ற தகவல்களை வெளியிடுவதன் மூலம் பல நாட்டு இராணுவங்களின் கோர முகம் தெரிய வருகிறது. இதே போன்று இலங்கை படு கொலைகள் பற்றியும் உண்மை தகவல்கள் வெளி வர வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களே....
தாளைதீன் - பண்டார்,புருனே
2010-10-23 14:26:01 IST
ஆப்கானிஸ்தான்,ஈராக்,வடகொரியா, பாலஸ்தீனம்,ரஷ்யா,சீனா, ஜப்பான், சிரியா,கியூபா, இன்னும் எத்தனையோ நாடுகளை அமெரிக்கா தனது படை பலத்தாலும், பொருளாதார பலத்தாலும், செய்துள்ள கொடுமைகளை எந்தநாடும் மறந்திருக்காது. அடுத்தவரின் துன்பங்களை படம் எடுத்து ரசிக்கும் பழக்கம் அமெரிக்காவின் பழக்கம். நவீன யுகத்தில் அது பாதுகாக்கப்பட முடியாமல் வெளியாகிவிடுகிறது. இது போல் வெளியாவது இது இரண்டாவது முறை. மனித உரிமை பற்றி பேச சிறிதும் தகுதி இல்லாத அரக்கர்கள்....... ,...
அ.நவாப் ஜான் திருச்சி. - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-23 14:18:38 IST
இதற்கு இந்த புஷ்ஷு என்ன பதில் சொல்லப்போகிறார்....
கவிதா - திருச்சி,இந்தியா
2010-10-23 14:07:53 IST
தங்களுக்கு எதிரானவைகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைகள் .நாம் செய்வதெல்லாம் உண்மைகள்.கேட்கும் மக்கள் ஊமைகள்.இந்த விசயத்தில் மீடியாக்களின் ஈடுபாடு சொல்லும் அவைகளின் அமெரிக்க நிலைபாட்டை.எவ்வளவு தூரம் மக்களை சென்றடையும் அப்பாவி மக்கள் மீதான அமெரிக்காவின் இவ் வன் கொடுமை பார்ப்போம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
2010-10-23 14:04:56 IST
அப்பா இலங்கையில இந்தியாவும் இலங்கை படையும் தமிழர்களை கொன்னது கொஞ்சம் தானா ?...
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-23 14:00:26 IST
இன்னும் பல ரகசியங்கள் ஈராக் மண்ணில் புதைந்து உள்ளது. இன்னும் தோண்டவும்....
2010-10-23 13:54:17 IST
The most heinous crimes ever perpetrated in the history of mankind. Americans who claim to profess good nature and human concern and guardians of human rights are rank perpetrators of colossal crimes un known in the annals of history. The then American Head of state and heads of allied forces should face trial for this crime as was done for war crimes during II world War....
தமீம் - singapore,இந்தியா
2010-10-23 13:51:22 IST
அட்டூழியம் புரிவதற்காகவே அவதரித்தவர்கள் அமெரிக்கர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்....
லாவண்யா பிரகாஷ் - குடமலசிட்டிலாடின்அமெரிக்க,கவுதமாலா
2010-10-23 13:18:45 IST
Hello Sir, I read this magazine everyday, I come to know about up to date information that is happening in our country. Though we are away from our home town,Dinamalar helps us to know about the present condition of our country. Thank you Dinamalar, Lavanya Prakash...
கோகுல் ரகுபதி - பெங்களுரு,இந்தியா
2010-10-23 13:03:43 IST
விகிலீக்சின் துணிச்சல் க்கு மிகவும் பாராடுக்கள். இந்த விஷயம் இதற்கு முன்னரே அனைவரும் அறிவர். இறந்த அனைவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபன்கள்... -கோகுல்...
 

கருத்துகள் இல்லை: