வியாழன், 21 அக்டோபர், 2010

ஐ.நா நிபுணர்கள் குழுவிற்கு எழுத்து மூலமாக சாட்சியளிக்கலாம்

இலங்கையில்   இறுதிக்கட்ட யுத்தத்தின் போது  இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா சபை செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, எழுத்து மூலமான சாட்சியங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
எழுத்துமூலமாக சாட்சியமளிப்பவர்கள் 10 பக்கங்களுக்கு அதிகரிக்காது சாட்சியமளிக்குமாறும், அவற்றுடன் அவர்களை தொடர்பு கொள்ளும் விபரத்தையும் அதனுடன் இணைக்குமாறும் நிபுணர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த எழுத்துமூலமான சாட்சியங்களை டிசம்பர் 15 ஆம் திகதி வரை   panelofexpertsregistry@un.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.    மேலும் நிபுணர்கள் குழுவிடம் சாட்சியமளிப்பவர்களின் விபரம்   இரகசியமாக பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தயாரிக்கப்பட்ட இணையறிக்கையில் காணப்படும் செயற்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வும், ஐ.நா சபை செயலாளர் பான் கீ மூனும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மேற்க்கொண்ட     நியூயோர்க் விஜயத்தின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என ஐ.நா செயலாளரின் ஊடகப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: