வெள்ளி, 12 பிப்ரவரி, 2010






பழங்குடியினரை ஏமாற்றும் கல்வித் திட்டம்!
வியாழன், 11 பிப்ரவரி 2010( 18:06 IST )

நமது நாட்டின் பழங்குடியின மக்களுக்கு கல்வி புகட்டி, அவர்களின் கற்றோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பள்ளிக் கல்வியைக்கூடத் தொடராமல் பாதியிலேயே நின்றுவிடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வரும் நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


FILEநமது நாட்டின் மக்கள் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள், இந்தியா முழுவதும் பெரும் அளவிற்கு பரவி வாழ்ந்துவரும் 187 மாவட்டங்களில்தான், நமது நாட்டின் வனச் செல்வத்தில் 68 விழுக்காடு உள்ளது. இந்த வனப் பகுதிகளில்தான் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.

நமது நாடு விடுதலைப் பெற்று 62 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்தான், பழங்குடியினரின் நலன், அவர்களின் கல்வியறிவு, அவர்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்தித்தருதல் ஆகியவற்றில் சமீப காலமாக்கத்தான் மத்திய அரசு மிகுந்த சிரத்தையுடன் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த விசேட சிரத்தையின் ஒரு அங்கமாகத்தான், பழங்குடியின பிள்ளைகள் கற்கும் வாய்ப்பை அதிகரிக்க, அவர்கள் தங்கிப் படிக்க வசதியாக மாணவர் விடுதிகளை கட்டித்தர 2010-11 நிதியாண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்று பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.

ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த ‘நாமும் நமது பழங்குடியினரும்: பண்பாட்டுப் பாதுகாப்பும் சிந்தனைப் பகிர்வும்’ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் காந்தி லால் பூரியா வெளியிட்டுள்ளார்.

வனப் பகுதிகளில் ஒடுக்கப்படும் பழங்குடியினர்!

வனப் பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்துவரும் பகுதிகளிலேயே கல்விக் கூடங்கள் திறப்பதும், அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு நீண்ட தொலைவில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி செய்துத் தரும் திட்டத்திற்காகவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் காந்தி லால் பூரியா கூறியுள்ளார்.

மேலெழுந்தவாரியாக இந்த அறிவிப்பை படிக்கும் எவரும் இதனை வரவேற்பர். ஆனால், மத்திய அரசுக்கு - இத்தனையாண்டுக் காலம் கடந்த பிறகு - பழங்குடியினர் கல்வி மீது திடீர் அக்கறை பிறந்துள்ளதேன் என்ற கேள்விக்கும் நாம் பதில் தேடியாக வேண்டு்ம்.


FILEஇந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட ஒரிசா மாநிலத்தில்தான் மிக அதிக அளவிற்கு வனப் பகுதியும், பழங்குடியினர் மக்கள் தொகையும் உள்ளது. அம்மாநில மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் 30 விழுக்காடுகளுக்கு மேல் உள்ளனர். இது திடீரென்று பெருகிய மக்கள் தொகையல்ல, ஆண்டாண்டுக் காலமாக இருந்துவரும் நிலைதான். ஆனால் இதுநாள் வரை அவர்களின் கல்வி மேம்பாடு குறித்து மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியேதும் ஒதுக்காத மத்திய அரசிற்கு இப்போது கரிசனம் பிறந்திருப்பதற்கு என்ன காரணம்?

ஒரிசா மாநிலத்தில் எந்தெந்த மாவட்டங்களிலெல்லாம் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்துவருகின்றனரோ அந்த பகுதிகளில்தான் இரும்புத் தாது உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த கனிம வளத்தை - மிகக் குறைந்த விலை கொடுத்து - கைபற்ற திட்டமிட்டு வந்த தனியார் நிறுவனங்களை அப்பகுதியில் வாழும் பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.




thanks to . Webdunia.com

கருத்துகள் இல்லை: