காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. நிறைவு விழாவில் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது இந்தியா. அதை ஏற்று அவரும் இன்று டெல்லி வந்து சேர்ந்தார்.
அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயசிங்கே ஆகியோரும் வந்துள்ளனர்.
நாளை அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். அப்போது ராஜபக்சே குழுவினருக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவிக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இரு தலைவர்களும் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவிக்கும் இந்திய அரசின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக