இரண்டாவது நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. வருமுன் காப்போம், கண்ணொளி திட்டம் இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம், ஊறமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோர், முதியோர் சிகிச்சை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் லேபராஸ்கோபிக் குடும்ப நல அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5,000 முதல் ரூபாய் 20,000 வரை செலவாகும். அரசு மருத்துவர்கள்தான் இதில் அனுபவம் மிகுந்தவர்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைகள் ஒரு மாரடைப்பு நோயாளிக்கோ, பக்கவாத நோயாளிக்கோ மேல்நாடுகளில் சிகிச்சையளிக்கப்படும் அதே மருந்து கொண்டுதான் நம் நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது நம்ப முடியாத உண்மை. ஒரு காச நோயாளிக்கு 5000 முதல் 6000 பல மருந்துக்கு கட்டு ப்படாத காசநோய் நோயாளிக்கு ரூ.2,00,000 வரை மதிப்பிலான மருந்துகளும், பாம்புக்கடி நோயாளி உயிரைக் காப்பாற்ற ரூ.10,000 முதல் ரூ.2,00,000 வரை மருந்துகளும், மாரடைப்பு, சிறுநீரக, எலும்பு முறிவு, நரம்பு, மூளை அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.3,00,000 வரை ஆன சிகிச்சைகள் இலவசம். ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக இதுவரை எட்டுப் பேரக்கு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தரத்திலான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் ஆய்வக வசதியுடன் செய்யப்படுகிறது. ஒரு முறை போய்ப் பாருங்கள். அரசு மருத்துவமனையின் தரத்தை உணருவீர்கள்.
புற்று நோய், இதய சிறுநீரகம், வயிறு மற்றும் மூளை சிகிச்சைகள் சர்க்கரை ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு, கால் கை வலிப்பு மற்றும் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் இலவசம். மேலும் விஷம் அருந்தி பாதிக்கப்பட்டோர், பாம்பு, தேள் கடித்தது, விபத்து மற்றும் தீக்காயங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பிறந்த பச்சிளம் குழந்தை முதல் அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும் அனைத்து மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலால் அடிக்கடி தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றவை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சைப் பிரிவு, கை அறுவை சிகிச்சைப் பிரிவுகள், உலகத் தர சான்றிதழ் பெற்றவை.
மார்பக புற்றுநோய் கண்டறிய மாமோகிராம், கர்ப்பப்பை புற்று நோய் கண்டறிய பாப்ஸ்மியர் இவை தேவைப்படுவோருக்கு இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ரூ.2500 முதல் ரூ.4000ம் வரை எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன் ரூ.500க்கு வெளி நோயாளிகளுக்கும் ரூ.350க்கு உள்நோயாளிகளுக்கும் எடுக்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.8000ம் வரை மதிப்புள்ள எம்.ஆர்.ஐ.யிலும் ஸ்கேன் ரூ.2500க்கு எடுக்கப்படுகிறது.
தனியார் மருத்துவர்களால் உலக அளவில் மருத்துவ சுற்றுலா வருமானம் உலகளவில் பெருமை என்றாலும் நம் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் என்றுமே முதலிடம் அரசு மருத்துவமனைகள்தான். பதினைந்து வருடங்கள் முன்பிருந்த அதே அளவுதான மருத்துவர்கள் என்றாலும் நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்ப கட்டிடங்கள் அதிகரித்தாலும் கருவிகள் வந்தாலும் மருத்துவர்களும், ஊழியர்களும், போதவில்லை என்பதே கசப்பான உண்மை. சென்னையில் புதிதாக 200 படுக்கை வசதி சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் கிமிமிவிஷி தரத்திலான மருத்துவமனைகள் என்று அமைந்தாலும், பெரும்பாலான இடங்களில் இத்தனை நோயாளிகளுக்கு இத்தனை மருத்துவர், செவிலியர் ஊழியர் என்று இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. எனவே ஏராளமான நோயாளிகள் கட்டில் இல்லாமல் பாயிலும் படுக்க வேண்டிய நிலை தரமான சிகிச்சை கிடைப்பதால் இதையெல்லாம் பொருட் படுத்தாமல் எதையும் தாங்கும் இதயத்தோடு சிகிச்சை பெற்றுச் செல்லும் ஒவ்வொரு மக்களும் நன்றி சொல்வது ஆண்டவனுக்கு மட்டுமல்ல. ஆள்பவர்களுக்கும்தான்.
முழு உடல்பரிசோதனைத்திட்டம்
குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் முழு உடல்பரிசோதனைத்திட்
என்ன தான் தனியார் மருத்துவமனைகள் குணப்படுத்தினாலும், காசு கொடுக்கும்போது மன நிறைவுடன் வயிறு எரியாமல் பணம் கொடுப்பவர்கள் யார் என்றால் அலு வலகத்திலோ, இன்சூரன்ஸ் மூலமோ பணம் கொடுக்கும் மக்களும் தகவல் தொழில் நுட்ப வேலையில் அல்லது உண்மையிலேயே பணக்காரர்கள் 1 சதவீதம் பேர்கள்தான்.
மீதி ஆட்கள் எல்லாம் வீடு வாசல் நிலம், நகை இருப்பதை விற்று கடனுக்கோ, வட்டிக்கோ வாங்கி கவலையோடு பணத்தைக் கட்டி வீட்டுக்கு வருபவர்கள் தாம் இது போக இருப்பதெல்லாம் தனியார் மருத்துவமனைக்கே கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வந்த லட்சக்கணக்கானோர் குணமாக்கி வீடு திரும்பும் அதிசயம் எங்கே என்பது சிலருக்க மட்டுமே அல்ல மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவை வெறும் அரசு மருத்துவமனைகள் அல்ல. உயிரைக் கொல்லும் நோயிலிருந்து குணமாக்கும் கோயில்கள் என்பது அங்கே இருந்து மீண்டவர்களை கேளுங்கள் சொல்வார்கள். அது தெரிந்தும் பழி சொல்லும் மக்களை என்ன செய்வது உண்மையிலே சிறு சிறு கு றைகளை பெரிதுபடுத்தாமல் தங்கி குணமாகிச் செல்லும் அனைவரும் தினசரி அதை கடக்கும்போது கைகூப்பி தொழுவதில் ஆச்சர்யம் இல்லை.
உயிர்காக்கும் 108 சேவை
எங்கெல்லாம் மக்கள் துன்பத்தோடு இருக்கிறார்களோ, அங்கே அவ
விபத்து நடந்த இடத்தில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு என்றால் இரண்டு பக்கமும் வருமானம் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்று எவர்கள் அடித்த கொள்ளைக்கு கலைஞர் வைத்த முற்றுப் புள்ளி ஆம்புலன்ஸ் இதுவரை இதன் மூலம் 5.7 லட்சத்துக்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதே இதன் பயனை சொல்லும் பிரசவம். விபத்து, மாரடைப்பு, தேள், பாம்பு கடி, தீ, திருட்டு, போலீஸ் என எதற்கு அழைத்தாலும் 20 நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் இந்த இலவச சேவைக்கு நிகர் எது? நீங்கள் விரும்பும் மருத்துவமனை தனியாரோ, அரசோ எங்கும் கொண்டு சேர்ப்பார்கள் உயிர்காப்பார்ககள். தங்க நேரம் என்று சொல்லப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதால் பெரும்பாலான நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள். 366 வண்டிகள் இந்த வண்டிகளால் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு வினோதமான பிரச்சினை ரோட்டில் கிடக்கும் எல்லோரையும் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துவிடுவதோடு இவர்கள் வேலை முடிந்துவிடுகிறதுகூட ஆட்களில்லாமல் சுயநினைவில்லாமல் இருப்பவர்களை நோயிலிருந்து காப்பாற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் பிழைக்க வைத்துவிட்டாலும், வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆட்கள் இல்லை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுமார் 30 நோயாளிகள் வரை இந்த வகையில் இருக்கிறார்கள். தனியார் தொண்ட நிறுவனங்கள் அனைவரையும் அழைத்து செல்ல இயலாத நிலை, உடன் ஆட்கள் இல்லாததால் படுக்கையிலேயே மலம், சிறுநீர் கழி
குறைந்த கட்டண சடல ஊர்தி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆனால் மனிதன் இறந்தாலே ஆயிரம் பொன் பறிக்குமிடம் ஒன்று உண்டென்றால், அது சடல ஊர்தி கொள்ளைதான் ஒரு கிலோ மீட்டருக்கு 1000 ரூபாய் முதல், கட்டணம் ஆரம்பம் நெருங்கிய உறவினரை சம்பாதிக்கும் குடும்பத் தலைவரை கண்ணுக்கு க ண்ணாக வளர்த்தவரை இழந்து குடும்பமே தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொ
இதை தடுத்து நிறுத்த தனியார் தொண்டு நிறுவனங்கள் குறைந்த கட்டண ஊர்தி சேவை வழங்க முன் வந்தாலும் அவர்களை உள்ளே விட மறுத்து அராஜகம் செய்யும் கும்பலுக்கு பாடம் புகட்டவும் மக்கள் குறை தீர்க்கவும் வந்தது அரசு தமிழக சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் குறைந்த கட்டண அமரர் ஊர்தி சேவை தற்போது மாவட்ட அளவில் குறைந்த செலவில் குளிர் சாதன வசதியுடன் இதுவரை 17,000 அமரர்கள் உடல் வீடு போய்ச் சேர்ந்து நீத்தார் கடன் தீர்க்க உதவும் இத்திட்டத்தால் மக்கள் மனதார தமிழக அரசை வாழ்த்துகின்றனர்.
கண்டவர் சொன்னதில்லை சொன்னவர் கண்டதில்லை என்பது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து குணமாகி சென்றவர்களை கேளுங்கள். அரசு மருத்து வமனைகள் மூன்று காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். முதல் காரணம் குப்பைகள் சுகாதாரம் இன்மை இது மருத்துவமனையில் பணிபுரிவோர் கொண்டு வந்து போடுவதல்ல நோயாளிகளும் அவர்கள் உறவினரும் போடுவது அள்ளுவதற்கு அங்கே போதுமான ஆட்கள் இல்லை என்பதுதான் உண் மை.
வரும் ஆட்களுக்கு தக்கவாறு பணியாளர்கள் இருந்தால் கண்டிப்பாக சுத்தம் வரும். மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தாலே பாதிக் குப்பை தீர்ந்துவிடும். பார்வையாளர் நேரம் தவிர மற்ற நேரங்களில் நோயாளியின் உறவினர்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம்.
இரண்டாவது காரணம் கூட்டம் அதிகம் தமிழக மக்கள் தொகையில் அறுபது முதல் என்பது சதவீத மக்கள் இதை பயன்படுத்துவதால் தரமானதாக இருப்பதால் கண் டிப்பாக கூட்டம் இருக்கத்தானே செய்யும் தரமில்லாமல் சிகிச்சை அளித்தால் கூட்டம் வருமா? அரசியல் கூட்டம் போல இது கூட்டி வந்த கூட்டம் அல்ல உயிரின் மதிப்பு தெரிந்த மருந்தின் விலை தெரிந்த கூட்டம் காத்திருந்தாலும், தரமான சிகிச்சை கிடைக்கும் என்பதை உணர்ந்த கூட்டம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த கோவை மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்வதைப் போல நிர்மலா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை உதவியை நாடலாம். மகளிர் காவலர்கள் மற்றும் காவல்துறையினரும் அவசியம் ஏற்பட்டால் உதவுவார்கள்.
உண்மையில் மிக திறமைசாலிகள் இருப்பது அரசாங்க மருத்துவமனைகளில்தான் இருக்கின்ற வசதியை வைத்தே தி
இருக்கும் வியாதியை கண்ணால் கண்டவுடன் கண்டுபிடிக்கும் மற்றும் சில பரிசோதனைகளிலேயே முடிவுக்கு வரும் அரசு மருத்துவர்களின் திறமை வேறு. அரசு மருத் துவருக்கு ஆயிரம் வேலைகள். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, வருமுன் காப்போம் திட்டம், சிறைவாசிகள் பரிசோதிப்பு, இளம்கலை, முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் செவிலியர், அவசர சிகிச்சை உதவியாளர், தொழில் நுட்ப பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் பாடம் சொல்லித் தருதல், முக்கிய பிரமுகர்கள் வரும்போது உடன் மருத்துவ வாகனத்தில் தயார் நிலையில் உடன் செல்லுதல் என இதர வேலைகள் இருந்தாலும் பெருகி வரும் நோயாளிகளின் கூட்டத்திற்கேற்ப போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையிலும் மிகுந்த வேலைப்பளுவுக்கு இடையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒரு அரசு மருத்துவர் தான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு முதல் 50 மடங்கு வரை உழைக்கிறார்கள் என்பது அவர்ககள் செய்யும் வேலையைத் தெரிந் தவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதம மந்திரியோ, குடியரத் தலைவரோ, முதலமைச்சரோ, அமைச்சர் பெருமக்களோ யாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றது ஒரு காலம். என்ன காரணத்தினாலோ அவர்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்வதால் பத்திரிக்கை மற்றும் மீடியாவின் ஒட்டு மொத்த கவனமும் தனியார் மருத்துவமனைகள் மீது குவிந்தது.
கலைஞர் கொடுத்த வரம்
உலக அளவில் நமது தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா நகராகி கோடிகளை குவித்தாலும் ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு எட்டாத கனியான தனியார் உயிர் காக்கும் மரு த்துவத்தை கைக்கு எட்ட வைத்தவர் டாக்டர் கலைஞர் என்று சொன்னால்மிகையாகாது. இது கலைஞர் கொடுத்த வரம். கோடிக்கணக்கான குடும்பங்கள் வாழ்த்துவதே இந்த திட்டத்தின் சிறப்பாகும். இதை தனியார் மருத்துவமனைகள் மற்றொரு வருமான வா
அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளின் தரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளில் மிக முக்கியமானதும், நோய்கள் வருமுன்பே காக்க வல்ல வரப்பிரசாதமான தடுப்பூசிகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து பயனாளிகளுக்கு போய் சேரும் வரை ஒரே சீதோஷ்ண நிலை வைக்கப்பட்டால்தான் அது மிகுந்த பலன் தரும்.
அரசு மருத்துவமனைகளில் இவை உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி சரியான முறையில் பாதுகாக்கப்பட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக