சனி, 16 அக்டோபர், 2010

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படுவர் : டக்ளஸ்

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதற்காக சிங்கள மக்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களை சந்தித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்களின் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.போதியளவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டால் மட்டுமே குறித்த சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பின்னணியில் தெற்கு மக்களை கூடிய விரைவில் மீள் குடியேற்றுவது சாத்தியமாகாது எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

தெற்கில் தங்களது சகல சொத்துக்களை இழந்த பல தமிழர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இரண்டு தரப்பினருக்கும் இடையில் பிழையான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: