வியாழன், 14 அக்டோபர், 2010

Yoga in China இந்திய யோகாவிற்கு சீனாவில் அமோக வரவேற்பு

பீஜிங்:இந்திய யோக கலை சீனாவில் சக்கை போடு போடுகிறது. இதற்காக வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஸ்ரீஸ்ரீரவிசங்கரை சீனாவிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பீஜிங்கில் சீனாவின் நட்புறவு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒன்றில் யோக கலையை பற்றி தகவல் அளிக்கும் படி ரவிசங்கரை அழைத்துள்ளனர். யோக கலையைகற்க ஆர்வம் உள்ளவர்கள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய சீன நட்புறவு அடிப்படையில் மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் ஒருவரை அழைத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. யோக கலையை கற்ற சீன தொழில் அதிபர் ஒருவரான டாங்குயூ என்பவர் கூறும் போது கடந்த ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற ரவிசங்கரின் யோககலையை கற்றபின்னர் தொழில் அபிவிருத்தியடைந்ததாகவும் அதனை முன்னிட்டு யோக கலையை சீனாவில் அனைவரும் அறியும் விதத்தில் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் யோக கலை மையத்தை உருவாக்கிவைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் சீன அரசு தன்னுடைய கொள்கைகளை சிறிதளவு தளர்த்தியுள்ளது அதன்படி அரசின் உதவியுடன் வாழும் கலை மையத்தை சேர்ந்த சுவாமி அமோல்ஜி அழைக்கப்பட்டு யோகா குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமோல்ஜி சீனாவிற்கு சென்றுவந்த பின்னர் சீனர்களிடையே யோகா விழிப்புணர்வு ஏற்பட்டு ஷாங்காய் மற்றும் பீஜிங் பகுதியை சேர்ந்த 24க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் யோகா பயிற்சி எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: