வெள்ளி, 4 ஜூன், 2010

அங்காடி தெரு, சிங்கம், சுறாகோரிப்பாளையம்,போன்ற படங்களின் திருட்டி சிடிக்கள் விற்பனையை

நெல்லை தூத்துக்குடி, நாகர்கோவி்ல் பகுதிகளில் சிங்கம், சுறா படங்களின் திருட்டு சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக திரைப்பட வினியோகஸ்தரர்கள் சங்கத்தினர் டிஐஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட வினியோகஸ்தரர்கள் நெல்லை டிஐஜி சண்முகராஜேஸ்வரனிடம் அளித்துள்ள புகாரில்,

நெல்லையில் 100க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் உள்ளனர். திருட்டு சிடிக்களால் வினியோகஸ்தர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் பகுதிகளில் பல கடைகளில் புதிய பட சிடிக்கள் திருட்டு தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சிங்கம், சுறா, அங்காடி தெரு, கோரிப்பாளையம் போன்ற படங்களின் திருட்டி சிடிக்கள் விற்பனையை ஆதாரபூர்வமாக கண்டறிந்துள்ளோம். இதுபோல் திருட்டு சிடிக்கள் சந்தையில் விற்கப்பட்டால் மிகப்பெரிய தொழில் பாதிப்பு ஏற்படும்.

திருட்டு சிடிக்கள் தயாரிக்கப்படுவதால் பல கோடி ரூபாய் முதலீடு செய்து திரைப்படத்தை வாங்கிய வினியோகஸ்தரர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே திருட்டு சிடிக்கள் விற்பனையை அடியோடு ஓழிக்கவும், தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: