
குறிகட்டுவான் ஊடான கடற்போக்குவரத்து தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இன்றைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறைப் பகுதியைச் சென்றடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தும் நேரில் பார்வையிட்டார்.
இதன் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் சுதாகர் வேலணை உதவி அரச அதிபர் நந்தகோபன் நெடுந்தீவு உதவி அரச அதிபர் திலிங்கநாதன் குமுதினிப் படகோட்டிகள் கடற்படை அதிகாரிகள் உளளிட்ட பல்வேறு தரப்பினரும் அங்கு வருகை தந்திருந்தனர்.
பயணிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் குமுதினிப் படகோட்டிகள் அமைச்சருக்கு எடுத்து விளக்கினர்.
அத்துடன் நெடுந்தீவு ப.நோ.கூ. சங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த படகுசேவை தற்போது பழுதடைந்துள்ளதால் அப்படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் குமுதினிப் படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்நிலையில் குமுதினிப் படகும் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக