செவ்வாய், 1 ஜூன், 2010

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்

அரியநேத்திரனின் அறிக்கை பின்வருமாறு
முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

வடமாகாணத்தில் இடம்பெறவிருக்கும் மாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்க தரப்பினர் வெற்றிபெற்றாலோ, அன்றி தோல்வியுற்றாலோ இரண்டுமே அரசாங்கத்திற்கு கிடைக்கப்போகும் மாபெரும் வெற்றிதான். காரணம் களுதைதேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழீழம், தமிழர் தாயகம்,சமஷடி என கடந்த 34 வருடங்களாக தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் அரசியல்வாதிகள் ஒரு சாராரின் வரலாறு வடமாகாணசபைக்கான தேர்தலுடன் சங்கமமாவது சந்தோசகரமான விடயமே! ஆசிரியர் மஹாவலி.கொம்

கருத்துகள் இல்லை: