வெள்ளி, 11 ஜூன், 2010

பகுத்தறிவு பாரீர் , கலைஞர் பேத்தி கட்டிய அன்னதான கூடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முண்டக கண்ணி அம்மன் கோவிலில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி குடும்பத்தார் கட்டிய அன்னதான கூடத்தின் கல்வெட்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மைலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவிலில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. கோவில் பிரகாரத்திலேயே அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடம் அசுத்தமானது.

இதையடுத்து பிரமாண்டமான அன்னதான கூடம் கட்ட முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி (செல்வியின் மகள்) குடும்பத்தினர் முன் வந்தனர்.

கரந்தை கப்பல் முருகேசன் செட்டியார் ஜானகி அம்மாள் நினைவாக எழிலரசி  டாக்டர் ஜோதிமணி தம்பதியினர் ரூ.13 லட்சம் செலவில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டி உள்ளனர்.

அன்னதான கூடத்தின் திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. முதல்  அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரிப்பன் வெட்டி அன்னதான கூடத்தை திறந்தார். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், துர்கா ஸ்டாலின், செல்வி, கயல்விழி, காவேரி கலாநிதிமாறன், பிரியா தயாநிதிமாறன், அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், அறங் காவலர் குழு தலைவர் உதயகுமார், இணை ஆணையர் காவேரி, கோவில் நிர்வாக அதிகாரி மோகன சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் 360 கோவில்களில் தினசரி அன்னதானம் நடக்கிறது. முண்டக கண்ணி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ள இந்த இடம் சமீபத்தில் வழக்கில் இருந்து மீட்கப்பட்டது.
 

கருத்துகள் இல்லை: