செவ்வாய், 8 ஜூன், 2010

தனங்கிளப்புப் பகுதியில் குப்பைமேடொன்றில் கிடந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியானதுடன்,

சுண்டிக்குளம் பிள்ளையார் ஆலயவளவிலேயே   நேற்று திங்கட்கிழமை மாலை   5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.    ஆலயவளவில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தவர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.    தென்மராட்சி தெற்கு  தனங்கிளப்பு கிராமசேவகர் பிரிவு அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில்   நடைபெறவிருந்தது.      அக் கூட்டத்தை நடத்துவதற்காக  தற்காலிக   கொட்டில்களை அமைத்து,       சுத்திகரிப்பு வேலையில்   அப் பகுதியைச் சேர்ந்தவர்கள்  ஈடுபட்டிருந்தனர்.
அங்கு சேர்ந்த குப்பை கூளங்களை ஏற்கனவே அங்கிருந்த குப்பைமேட்டில் போட்டு தீமூட்டிக்கொளுத்திய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் இருவர்   ஸ்தலத்திலேயே         பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தில் தனங்கிளப்பைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான பொன்சேகர் மற்றும் 29 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான ஞானப்பிரகாசம் ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.          இச் சம்பவத்தை அடுத்து,        அப்பகுதியில் சிறு பதற்றம் ஏற்பட்டதுடன் குப்பைக் குழியிலிருந்து எவ்வாறு குண்டு வெடித்துள்ளது என்பது தொடர்பில் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்த வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: