திங்கள், 7 ஜூன், 2010

15 ஆயிரம் கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள்

போபால் : சுமார் 15 ஆயிரம் கொன்ற போபால் விஷ வாயு வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் . அதிகம் பட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் உள்ள நிறுவன தலைவர் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார் . போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மிக்' எனப்படும் "மீதைல் ஐசோ சைனைடு ' என்ற நச்சு வாயு கசிவு, பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. கடந்த 26 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.

ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கல் : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரில், இந்நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர்.பி.ராய் சவுத்ரி காலமாகிவிட்டார்.விஷவாயு சம்பவம் நடந்த பின், மத்தியக் குழுவினர் சென்று ஆலையை பார்வையிட்டனர். போதிய பராமரிப்பின்மை தான் விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இந்த ஆலையின் தலைவரும், அமெரிக்கருமான வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மூன்று பேர், இவ்வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக போபால் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.

இன்று வழங்கப்பட்ட தீர்பை கேட்க கோர்ட்டில் ஏராளமனவர்கள் கடியிருந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இவர்கள் ஏன் வழக்கில் சேர்க்கப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். முன்னதாக பூட்டிய அறைக்குள் நீதிபதி தீர்ப்பை அறிவித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குற்றவாளிகள் யார் ? முழு விவரம் : இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் ( ஆர்.பி ராய்சவுத்ரி ) இறந்து விட்டார். ஏனையோர் விவரம் வருமாறு: பொறுப்புகள் அடைகுறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. கேசூப் மகிந்திரா ( யு.சி.எல்., சேர்மன்) , விஜய்கோகலே ( மானேஜிங் டைரக்டர்) , கிர்ஷார்கம்தார்( உதவி தலைவர்) , முகுந்த் ( வொர்க்ஸ் மானேஜர்) , எஸ்பி., சவுத்ரி( புரடக்ஷன் மானேஜர் ) , கே.வி., ஷெட்டி ( பிளான்ட் சூப்பிரண்டு ) எஸ்.ஐ., குரேஷி ( புரடக்ஷன் அசிஸ்டன்ட் ) .

கருத்துகள் இல்லை: