வியாழன், 10 ஜூன், 2010

விஸ்வமடு சம்பவம் நிரூபிக்கப்பட்டால் ஆறு இராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை இராணுவப் பேச்சாளர்

விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதான ஆறு இராணுவத்தினருக்குமெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்துடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆறு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின்படி 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அன்று அடையாள அணிவகுப்புக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: