புதன், 19 அக்டோபர், 2022

மலையகமும் நூலகமும்! வாசிப்பில் பின்தங்கும் மலையகம்?

  Esther Nathaniel மலைநாட்டு ஆதங்கம்!
கொழும்பிலுள்ள எனது நண்பனிடம் கிட்டத்தட்ட 300 நூல்கள் கைவசமிருந்தது கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு சிலவற்றைக் கொடுத்துவிட்டான்.
பின் மலையகத்தில் உள்ள ஒரு மூத்த அறிவாளியிடம் அவரும் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் வேண்டப்பட்டவர் அவரை தொடர்பு கொண்டூ என்னிடம் ஒரு தொகை நூல்களுண்டூ அதை மலையக பாடசாலை நூலகத்துக்காகக் கொடுக்க விரும்புகிறேன் .
அதற்குரிய அனுப்பும் செலவையும் தருகிறேன் என மிகவும் வினயமாகக் கேட்டுக்கொண்டார் அந்த மூத்த அறிவாளியும் நாளைக்கே ஏற்படுத்தி தருகிறேன் என உறுதியளித்துவிட்டார்.
உறுதியளித்ததோடு மட்டுமே தனது பணியை முடித்துக்கொண்டார். நண்பனும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தான் தன்னிடமிருந்த நூல்களை மலையக பிள்ளைகளிடத்தில் சேர்ப்பிக்க, மூத்த அறிவாளியோ இதோ இப்ப அதோ அப்ப என மூன்றுமாதமாக அவரால் ஒழுங்குப்படுத்த முடியவில்லை.

உடனே  நண்பன் யாழ்ப்பாண நூலத்தின் பிரதான நூலகரை தொடர்புகொண்டான் அய்யா நான் கொழும்பில் வசிக்கிறேன் சொந்த இடம் நாவலப்பிட்டி என்னிடம் முந்நூறு நூல்கள் உண்டு அதை தங்களுக்கு அனுப்பட்டுமா என கேட்டது தான் தாமதம் ...
தம்பி உடனே அனுப்புங்கள் அப்பு எங்களிடம் உள்ள நூல்களைத் தவிர ஏனைய நூல்களை எடுத்துக்கொண்ட ஏலவே உள்ள நூல்களை கிளிநொச்சிக்கோ வேறு இட நூலத்துக்கும் அனுப்புகிறோம் தங்களின் அனுமதியோடு என அழகாகக் கேட்டுக்கொண்டார்.
நண்பனும் கொழும்பு To யாழ்ப்பாண பஸ்சில் சேர்ப்பித்தான் யாழ்ப்பாணம் போனதும் அந்த பிரதான நூலகர் தனது மோட்டர்சைக்கிளில் வந்து பெட்டியை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்றுளளார் சென்றது மாத்திரமல்ல நூல்களுக்கு நன்றி சொல்லி வந்த அனைத்து நூல்களையும் பெயர் போட்டு ஒரு Acknowledged ஒன்றையும் நாவலப்பிட்டி வீட்டு விலாசத்துக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்த மலையக அறிவாளியால் ஒரு நூலகத்தை ஆயத்தப்படுத்தியோ பாடசாலை நூலகத்துக்கோ இதை போய்ச் சேர ஒரு Arrangements இனை செய்ய முடியாது போனது
கிட்டத்தட்ட மூன்று மாதம் தொலைபேசியில் கேட்டு அலுத்தவுடனே யாழ் நூலகத்துக்கு நூல்களை அனுப்பினார் நண்பர்.
ஆகவே எமது மலையகம் இந்த நிலையில்தான் உள்ளது எழுதவரும் செயல்பட வரும் ஒரு எழுத்தாளரை ஊக்கப்படுத்தவோ வரவேற்கவோ மாட்டார்கள்.
ஒரு செயலை சமூக நலனுக்காக மினக்கெடமாட்டார்கள் ஆனால் பாருங்கோ யாழ் பிரதான நூலகரின் செயலை அவர்களின் பொறுப்பை காரணம் நூல்களின் பெறுமதி வாசிப்பின் பெறுமதி அந்தநாள் தொடங்கி அறிந்து தெரிந்து வைத்துள்ளார்கள்.
மலையகத்தில் எத்தனை நூலகங்கள் உண்டூ அங்கு எத்தனை பேர் வாசிக்கிறார்கள் பயனடைகிறார்கள்.
நான் பாடசாலை நாட்களில் அட்டனில் UC நூலத்துக்குப்போவேன் நான் உறுப்புரிமையும் வைத்திருந்தேன்.
போனால் அங்கேயுள்ள பத்திரிகைகளில் நடுப்பக்கத்திலுள்ள சினிமா பக்கத்தில் உள்ள நடிகைகளின் மார்பில் மறைவிடத்தில் ஆண்குறியை வரைந்திருப்பார்கள் நான் இதை பல ஆண்டுகள் கவனித்துள்ளேன் பாலியல் வறட்சியாளர்கள் மனநிலை பாதிக்கப்பட்டோர் பொது மலசலகூடத்தில் குறிகளையும் கெட்ட வார்த்தைகளையும் எழூதி வைப்பதுபோல் இதுவும் ஆகும்.
ஆக மலையகம் எங்கே போய் கொண்டிருக்கிறது தெரியவில்லை அந்த நண்பன் சேமித்த நூல்கள் யாழ்ப்பாணத்துக்கு போய்விட்டது அவைகளை முதலில் மலையகத்துக்கே கொடுக்க பிராயசப்பட்டான் முடியவில்லை.
மலையகத்தில் பல்கலைக்கழகம் கட்டுவீர்களோ இல்லையோ அசியல்வாதிகளே ஒரு பெரிய நூலகத்தைக் கட்டுங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கினால் சமூகம் சராமமாரியாக மாற்றம் காணும் சாராய கடைகளை திறப்பதை எதிர்ப்போம்
எவ்ளவு காலம் கொழுந்து கூடைகளை சுமந்து சாவது.மண்டையில் கொஞ்சம் நூல்களை ஏத்துவோம்
இனி மலையகத்துக்கு தேவை ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித்தரும் அரசியவாதியின் வாக்குறுதிகள் அல்ல ஆயிரம் வாக்குறுதிகளையும் காதில் போடாமல் அமைதியாக அமர்ந்து வாசிக்கும் மனிதர்கள்

கருத்துகள் இல்லை: