ஞாயிறு, 16 அக்டோபர், 2022

கனடாவில் கோர விபத்து! தமிழ் அண்ணன் தங்கை உயிரிழப்பு


நியூ தமில்  : கனடாவின் மார்க்கமில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தை பின்னணியாக கொண்ட இருவர் உயிரிழ்ந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்களை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட டாஷ்போர்டு கேமரா காணொளியை உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியதை காணொளி காட்டுகிறது. பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.


இதில் 21 வயதான பதீரன் புவனேந்திரன் மற்றும் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் தாயார் 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பதீரன் வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். அவர் தனது பிறந்தநாளிலேயே உயிரழந்துள்ளார். நிலுக்சானா ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி ஆவார்.  இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

“பொலிஸாரிடமிருந்து குடும்பத்திற்கு மிகக் குறைந்த தகவல்களே கிடைத்துள்ளன. அவர் தனது மருமகள் மற்றும் மருமகனுக்கு இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வதாக கூறினார்.

"எங்களுக்கு உரிய பதில்கள் தேவை, என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும், ஆனால், நிச்சயமாக, இது எதையும் மாற்றப் போவதில்லை," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள நாங்கள் ஒருவித நீதியை விரும்புகிறோம்." என அவர் வலியுறுத்தியுள்ளார். சிகிச்சையில் இருந்து தாய் மீண்டு வரும் போது அவருக்கு நிறைய கேள்விகள் இருக்கும்.

தனது பிள்ளைகள் எங்கே என்று தாய் நிச்சயமாக கேட்பார். இது தான் நடந்தது என்று நான் அவரிடம் கூற வேண்டும். அவர் குணமடையும் வரை காத்திருக்கின்றேன்.

இந்த விபத்து அர்த்தமற்ற ஒன்றாகும். "இறுதியில், யார் சரி அல்லது யார் தவறு என்பது முக்கியமல்ல. எது எஞ்சியிருக்கிறது என்பதுதான் முக்கியம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

கருத்துகள் இல்லை: