ஞாயிறு, 16 அக்டோபர், 2022

வெளிநாட்டு சுற்றுலா தேவையா?. செல்வம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல நல்ல நினைவுகளும் அனுபவங்களும் கூட செல்வம்தான்

May be an image of 5 people and people standing

Karthikeyan Fastura  :  இவ்வளவு செலவழித்து வெளிநாட்டு சுற்றுலா செல்வது தேவைதானா.. அதை சேர்த்து வைக்கலாமே.. என்று கேட்ட மூத்த சொந்தங்கள் உண்டு. சில பொருளாதார ஆலோசகர்களும் அவ்வாறு கூறுவதை கேட்டு இருக்கிறேன்.
நானும் பொருளாதார ஆலோசகன் தான். ஆனால் என் பார்வையில் செல்வம் என்பது பணத்தை, சொத்துக்களை சேர்த்து வைப்பது மட்டுமல்ல, நினைவுகளை சேர்த்து வைப்பதும், அறிவை சேர்த்து வைப்பதும், மனிதர்களை சேர்த்து வைப்பதும் கூட செல்வம் தான்.


எங்களது தாய்லாந்து சுற்றுலா அப்படியான அற்புதமான நினைவுகளை, மனிதர்களை, அறிவை சேர்த்து வைத்த செல்வமாக இருந்தது என்பேன்.
குடும்பத்துடன் செல்லும்போது பாஸ்போர்ட், விசா, பன்னாட்டு ஏர்போர்ட் நடைமுறைகளை எங்கள் பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்த முடிந்தது. இந்த நடைமுறைகள் பழகும் போது உலகத்தின் கதவுகள் திறந்துவிட்ட உணர்வு கிடைக்கும். எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் தடை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கை பிறக்கும். பன்னாட்டு சுற்றுலா பயணத்திற்கு எப்படி நம்மை தயார் படுத்த வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். இந்த பயணத்தில் நாங்கள் கற்ற பாடங்கள் உங்களுக்காக சில.
1. முதல் சுற்றுலா பயணம் எனும் போது அதனை ஒரு சுற்றுலா ஏஜென்சி மூலமாக செல்வது நல்லது. அவர்களே ஐந்து நாட்களுக்கு குறையாமல் திட்டம் வகுத்து, முன்னேற்பாடுகள் செய்து கொடுக்கிறார்கள் எனும்போது நமது பயணத்திட்டம் மிக எளிமையாக இருக்கிறது. கூடுதலாக விசா நடைமுறைகள், அங்குள்ள உள்ளூர் நடைமுறைகள் தெரிகின்றது.
2. மிகக் குறைவான அளவிற்கு ஆடைகள் எடுத்துச் செல்லுங்கள். நாங்கள் எடுத்துச் சென்றதில் பாதியை காரில் ஒரு சூட்கேசில் வைத்துவிட்டு சென்றாலும் அங்கு சென்று பார்த்த பொழுது நாங்கள் கொண்டு வந்த உடைகள் சுற்றுலாவுக்கு ஏற்ற விதத்தில் இல்லை. மேலும் உள்ளூர் ஆடைகளுடன் ஒத்துப் போகவில்லை. தனியாக வாங்க வேண்டி இருந்தது.
3. பெரிய சூட்கேஸ்களில் கொண்டு செல்லும்போது அதனை திரும்ப எடுக்க luggage belt இல் வரும் வரை காத்திருக்க வேண்டும். 22 இன்ச் நீளமும், 18 இன்ச் அகலம், 10 இன்ச் உயரமும் இருந்து ஏழு கிலோ எடை எடை கொண்ட medium sized bag or suitcase தனி நபர் ஒருவர் கையோடு எடுத்துச் செல்ல முடியும். நான்கு டிக்கெட் இருந்தால் இதே அளவில் நான்கு லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்.
4. நம்ம ஊரில் கிடைக்கும் சுற்றுலா உடைகளை விட தாய்லாந்தில் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கின்றது.   தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இதே மாதிரி தான் என்று நண்பர்கள் கூறினார்கள்.
5. Flammable things இருந்தால் கையோடு எடுத்துச் செல்ல விட மாட்டார்கள். அதேபோல மாத்திரைகள் இருந்தால் கையில் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் இருக்கட்டும். எனக்கு முன்பு இருந்த ஒரு பெண்மணிக்கு இதனால் தாமதமானது.
6. விமானம் கிளம்பும் நேரத்திற்கு நான்கு மணி நேரம் முன்னமே உள்ளே சென்று விடுங்கள். பன்னாட்டு விமான பயணம் என்பதால் பல அடுக்கு நடைமுறைகள், சோதனைகள் இருக்கும். Entry gate, boarding pass, emigration check, security check எல்லாம் கடந்தால்தான் நம்ம விமானத்திற்கான passenger lounge இருக்கும். ஒவ்வொன்றிலும் உங்கள் விமானத்தோடு ஒட்டிய நேரத்தில் செல்லும் அனைத்து விமானத்தின் பயணிகளும் கூட்டத்தில் இருப்பதால் கூட்டம் நகர்வது மெதுவாக இருக்கும்.
7.  இது தவிர Security check நடக்கும் இடத்தில் customs officers நிற்பார்கள். Random ஆக கூப்பிட்டு தனியாக நம்மை விசாரிப்பார்கள். நமது பொருட்களை சோதனை செய்வார்கள். நான் பார்த்த வரையில் இவர்கள் கையில் சிக்குவது கிராமத்து மனிதர்களைப் போல தோற்றமளிப்பவர்கள், மத அடையாளங்களுடன் இருப்பவர்கள். சென்னை ஏர்போர்ட்டில் நாமம் போட்ட மனிதரையும் நிறுத்தினார்கள்,  இஸ்லாமிய அடையாளத்துடன் இருந்த மனிதரையும் நிறுத்தி விசாரித்தார்கள். கூடுமானவரை மத அடையாளத்தை சுமந்து கொண்டு பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்வது உகந்ததல்ல. அப்படியே செல்வதாக இருந்தால் அதற்கும் நேரத்தை ஒதுக்கி முன்னதாக சென்று விடுங்கள்.
8. Airport loungeல் duty free shops இருக்கும். தாய்லாந்தில் நிறைய நல்ல கடைகள் இருந்தன. அதனால் அங்கிருந்து சாக்லேட் மற்றும் vodka ஒன்று வாங்கிக் கொண்டு வந்தேன். ஒரு ஆளுக்கு இரண்டு லிட்டர் வரை கொண்டு செல்லலாம். அவர்களே அதனை பேக் செய்து அதிலேயே அழகாக receipt வைத்து கொடுத்து விடுகிறார்கள். அதனை அப்படியே வைத்திருந்தால் நல்லது.
9. பன்னாட்டு விமானத்தில் விமானம் கிளம்பிய பிறகு சைவம் அசைவம் இரண்டிலும் உணவுகள் வழங்கப்படுகிறது. சைவம் குறைவாக இருப்பதால் முன்னமே வந்துவிடும். கூடுதலாக hot drinks கேட்டால் மட்டும் கொடுக்கிறார்கள். Thai foodல் அரிசி கலந்த உணவு வகை கொடுக்கப்படுகிறது.
10. விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் காற்றழுத்தம் கூடுவதாலும் குறைவதாலும் காது அடைப்பு ஏற்பட்டு சிறிது நேரம் வலிக்கக்கூடும். இந்த விஷயத்தில் ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் சற்று சிரமப்படுகிறார்கள். Cotton எடுத்துச் செல்லலாம். ஆனாலும் பெரிதாக கை கொடுத்த மாதிரி தெரியவில்லை. விமானம் இறங்கிய பின்னும் காதடைப்பு இருந்தால் மூக்கை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு வாயை மூடிக் கொண்டு ஊதுங்கள். காதுக்குள் டப் டப் என்று மெல்லிய சத்தத்துடன் காற்றடைப்பு நீங்கும்.
11. தாய்லாந்து செல்வதற்கு on arrival visa உண்டு என்பதால் அங்கு சென்ற பிறகு அங்கிருக்கும் ஒரு படிவத்தில் உங்களது பாஸ்போர்ட் மற்றும் எந்த ஹோட்டலில் தங்க இருக்கிறீர்கள். ரிட்டன் டிக்கெட் போட்டதுண்டா போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் அளித்து கையொப்பமிட்டு ஒரு போட்டோ ஒட்டி கொடுக்க வேண்டும். ஆகவே அனைவரும் பாஸ்போர்ட் போட்டோ முன்பே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஹேண்ட் பேக்கில் gum paste ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தாய்லாந்து விசாவிற்கு ஒருவருக்கு 2200 கேட்கிறார்கள் அதுவும் கரன்சியாக மட்டுமே. 2000 ரூபாய்க்கு ரசீது கொடுக்கிறார்கள் 200 ரூபாய்க்கு என்ன கணக்கு என்று தெரியவில்லை. அது முடித்த பிறகு immigration check நடந்து அதன் பிறகு தான் luggage conveyor belt பக்கம் போக முடியும். அதுவரை நமது லக்கேஜ் அணாமத்தாக சுற்றிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் கையோடு கொண்டு செல்லும் மீடியம் ரக பேக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது.
12. வெளியே வந்த பிறகு நமது டூரிஸ்ட் ஏஜென்சி ஆட்கள் நமது பெயரை தாங்கி காத்திருப்பார்கள். அவர்கள் நமது வாகனத்திற்கு கூட்டி சென்று உதவுகிறார்கள். மொத்தமாக எங்களுக்கு தாய்லாந்து ஏர்போர்ட்டில் வெளியே வர மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டது.
13. சில நாடுகளுக்கு Direct flight இல்லாத காரணத்தினால் இரண்டு விமானங்களில் செல்ல வேண்டியிருக்கும். அங்கு இன்னும் சிரமங்கள் கூடுதலாக இருக்கும். அதனை முன்கூட்டியே புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல எளிய வழிகளை கையாளுங்கள். குறைவான லக்கேஜ்களை கொண்டு செல்லுங்கள்.
அவ்வளவுதாங்க. இந்த ஒட்டுமொத்த நடைமுறைகள் , சோதனைகள் உங்களுக்கு அயற்சியை கொடுக்கலாம். ஆனால் இவற்றை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற mindset உருவாக்கிக் கொண்டு தெளிவான புரிதலுடன் சென்றால் எளிமையானது தான். உங்களுக்கு இந்த பதிவு அப்படியான புரிதலை கொண்டு வந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

கருத்துகள் இல்லை: