ஞாயிறு, 16 அக்டோபர், 2022

சென்னை தனியார் பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. அலட்சியம் காட்டிய பள்ளி.. ‘உயிர் முக்கியம்’.. கதறிய குழந்தையின் தந்தை

இது பெரிய பிரச்சனையா
படியில் தவறி
tamil.oneindia.com  -  Vignesh Selvaraj   :  சென்னை : ஆவடி அருகே தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, பள்ளியில் படியில் விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாவது தளத்தில் அமரவைக்கப் படுவதாகவும், கழிவறை தரை தளத்தில் இருக்கும் நிலையில், உதவிக்கு கூட யாரும் செல்வதில்லை என்றும் குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். குழந்தை பாதிப்பு குறித்து கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததாகவும், குழந்தையின் தந்தை ஆடியோ வெளியிட்டு குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், முறையாக முதலுதவி அளிக்காமல் குழந்தையை பைக்கிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதிப்பை இன்னும் தீவிரமாக்கியுள்ளதாகவும், குழந்தையின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

குழந்தை கீழே விழுந்து

குழந்தை கீழே விழுந்து

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் குழந்தை ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் திடீரென பள்ளி நிர்வாகம் சார்பில், பெற்றொரை அழைத்து உங்கள் மகள் கீழே விழுந்துவிட்டார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அம்பத்துரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தைக்கு கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டதை கண்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

படியில் தவறி

படியில் தவறி

இதுபற்றி, குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது குழந்தை கழிவறைக்குச் செல்லும்போது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது என அலட்சியமாக பதிலளித்துள்ளனர். மேலும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டாம் தளத்தில் உள்ளனர். கழிவறை தரை தளத்தில் உள்ளது. இதனால் மாணவி கழிவறைக்கு செல்லும்போது படியில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அலட்சிய பதில்

அலட்சிய பதில்

மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகள் குறித்து குழந்தையின் உறவினர்கள் கேட்டதற்கு சிசிடிவி ஒயரை எலி கடித்ததால் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று அலட்சியமாக கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் சார்பில் பேசிய ஒருவர், அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி, அந்த பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது பெரிய பிரச்சனையா

இது பெரிய பிரச்சனையா

குழந்தைக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆயிரம் குழந்தைகள் படிக்குற இடத்துல, ஒண்ணு ரெண்டு பேருக்கு இப்படி நடக்க தான் செய்யும் என்றும் அவர் ஆணவத்துடன் பேசியுள்ளார். குழந்தையை தனியாக எப்படி கழிவறைக்கு அனுப்பினீர்கள் என்று மாணவியின் தந்தை கேட்டதற்கு துணைக்கு இன்னொரு 5 வயது குழந்தையை அனுப்பினேன் என்று பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பேசியுள்ளார்.

பள்ளி நிர்வாகம் மெத்தனம்

பள்ளி நிர்வாகம் மெத்தனம்

ஆயம்மாவை கூடவா மாணவிக்கு துணையாக அனுப்ப மாட்டீர்களா என்று திரும்பி கேட்டதற்கு "எத்தனை ஆயம்மாவை வைத்திருக்க முடியும் சார்?" என்று சாதாரணமாக அந்த ஆசிரியர் கூறியுள்ளார். இந்த அளவிற்கு பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கிலேயே வைத்து

பைக்கிலேயே வைத்து

மேலும் மாணவி காயம் அடைந்தபோது, முறையாக முதலுதவி அளிக்காமலும் பைக்கிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதிப்பை இன்னும் தீவிரமாக்கியுள்ளனர். இதனால், சிறுமியின் நிலையை மோசமாக்கியுள்ளனர். எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆடியோ

ஆடியோ

இச்சம்பவம் பற்றி, பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை ஒரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை பற்றி கண்ணீருடன் விவரித்துள்ளார். குழந்தைகள் படிப்பது எவ்வளவு முக்கியமோ, அவர்களின் உயிரும் மிகவும் முக்கியம், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இனி ஒரு மாணவர் கூட பாதிக்கப்படக்கூடாது. சிறு குழந்தைகளின் வகுப்புகளை மேல் தளங்களில் அமைக்கக்கூடாது என கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: