வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இலங்கை எம்பியை வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று.... புரட்சியாளர்களா? அமைச்சர் பந்துல குணவர்த்தன!

 தேசம்நெட் : நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இழுத்துச் சென்று கொலை செய்தது இலங்கையில் மட்டுமே.” அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிரடி!
தங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர்,
தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் நான் வாழ்ந்ததில்லை. வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை.


இந்த நிலையில் எனக்கு அரசமைப்பின் 14 (ஊ) சரத்து இல்லாமல் செய்யப்பட்டது. விரும்பிய நேரத்தல் விரும்பிய இடத்தில் வாழும் உரிமை இலங்கை பிரஜையாகிய எனக்கு இல்லாமல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைக் கூட இதுவரை பயன்படுத்தியது கிடையாது.

மேலும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருக்கு தனது சொந்த வீட்டில் வசிக்க முடியாதுபோனால் அந்த நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இலங்கை மட்டுமன்றி உலக வரலாற்றிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதியொருவர் மிகவும் கொடூரமான முறையில், வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். 12 மணிநேரத்திற்குள் 72 மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமானது உலக நாடாளுமன்ற வரலாற்றிலேயே கரும்புள்ளி என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: