புதன், 17 ஆகஸ்ட், 2022

சீனாவில் பெண் குழந்தை பிறப்பு வீதம் குறைந்தது! பாலின விகிதத்தை அதிகரிக்க குழந்கைகளை பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு

Giridharan N | Samayam Tamil :  உலகிலேயே மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா இருந்துவரும் நிலையில்,
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும தொடர்ந்து இருந்து வருகின்றன.
உலகிவ் உள்ள கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்று ஒரு பங்கு இவ்விரு நாடுகளில் மட்டுமே உள்ளதால், இந்த மக்கள் வளத்தையும், அவர்களை கட்டிக்காப்பதிலும் சீனா மற்றும் இந்திய நாடுகளின் அரசுகள் பெரும் சவாலை சந்தி்த்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
நாடு இப்படியே மக்கள்தொகையில் பல்கி பெருகி போனால் சரிப்பட்டு வராது என்று எண்ணிய இந்திய அரசு 1980 களிலேயே குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதன் பிறகு நாம் இருவர் -நமக்கு இருவர், நாம் இருவர் -நமக்கு ஒருவர் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வேரூன்றவே இந்தியாவி்ன் மக்கள்தொகை தற்போது கட்டுக்குள் உள்ளதாக சொல்லலாம்.

ஆனால் இந்திய மக்களை போன்று இல்லாமல் சீனர்கள் இந்த விஷயத்தில் எப்போதும்போல் தராளம் காட்டிதான் வந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன சீன அரசு, இப்படியே போனால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து ஒரு குடும்பம் -ஒரு குழந்தை என்ற சட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது. இதன் விளைவாக அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக குறைந்து வருகிறது. அதேசயம், இந்த சட்டத்தின் எதிர்விளைவாக ஆண்- பெண் பிறப்பு விகிதம் அங்கு அதலபாதாளத்துக்கு போய் கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீன அரசு, தற்போது அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள பொதுமக்க்ளை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி அதிக குழந்தைகளை பெற்றுகொள்ளும் தம்பதிகளுக்கு வரி விலக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வீடு, கல்வி கடனில் சலுகை, அரசு மானியங்கள் என பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், குழந்தைபேறு தொடர்ான திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்கவும், அரசு குழந்தை பராமரி்ப்பு மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்யாணத்துக்கு பெண் கிடைத்தாக சூழல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நிலை தங்களுக்கு வரக்கூடாதென சீன அரசு விழித்து கொண்டு, குழந்தைகள் பிறப்பு விகித்தை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது உலக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: